Advertisement

நீல ஒளியின் தாக்கம்!

Share

இன்று பரவலாகிவிட்ட எல்.இ.டி விளக்குகளில் நீல ஒளியை உமிழும் விளக்குகள், விஞ்ஞானிகளின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. ஏன்? நீல ஒளியால் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதுதான் காரணம்.

நீல நிற எல்.இ.டி ஒளியில் தினமும், 12 மணி நேரம் இருக்கும் ஈக்களுக்கு, நாளடைவில் மூளை மற்றும் நரம்பு பாதிப்புகள் ஏற்படுவதை விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர். இத்தனைக்கும், கண்கள் பறிக்கப்பட்ட ஈக்களுக்கும் நீல ஒளியால் இதே பாதிப்புகள் இருக்கின்றன.

எனவே, மடிக் கணினி முதல் செல்பேசிகள் வரை நாம் பயன்படுத்தும் திரைகள் உமிழும் நீல ஒளி அலைவரிசையால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி விஞ்ஞானிகள் எச்சரிக்க ஆரம்பித்துள்ளனர். திரை ஒளியைப் பார்க்கும் நேரத்தை குறைக்கும்படி அவர்கள் அறிவுரை தர ஆரம்பித்துள்ளனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Jayvee - chennai,இந்தியா

    இதற்க்கு ஒரே வழி.. அதாவது மனிதர்கள் தங்கள் கணைகளை பாதுகாக்க.. ப்ளூ பில்டர் கண்ணாடிகளை உபயோக படுத்தவேண்டும்.. வீட்டில் LED விளக்குகைகளை தவிர்க்கலாம்.. லேப்டாப் மற்றும் மொபைல் போனிகளில் நைட் mode விஷன் ஏற்பாட்டை செயல்படுத்தவேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement