Advertisement

எதிலும் ஒட்டும் பொருள்!

ஒட்டும் தன்மை கொண்ட பசைகள் எல்லா பரப்புகளின் மேலும் ஒட்டிவிடாது. எனவே, எந்தப் பரப்பின் மீதும் 'பச்சக்' என ஒட்டும் ஒரு பொருளை உருவாக்கிவிட ஆராய்ச்சியாளர்கள் பாடுபட்டு வருகின்றனர்.
அண்மையில், அமெரிக்காவிலுள்ள வடக்கு கரோலைனை மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், உலோகம், சிமென்ட், பிளாஸ்டிக் என்று எந்தப் பரப்பின் மீது வைத்தாலும், அட்டைப் பூச்சி போல ஒட்டிக்கொள்ளும் பொருளை உருவாக்கியுள்ளனர்.
பாலிமர்களை சிதைத்து கரைசலாக்கி, அந்தக் கரைசலை வேறு திரவத்தில் போட்டு கலக்கி, பாலிமர் மூலக்கூறுகளில் பல கிளைப் பிரிவுகளை விஞ்ஞானிகள் உருவாக்குகின்றனர். இந்த முறையை, 'திரவ நேனோ உற்பத்தி' முறை என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். இதன் மூலம் கிடைக்கும் கிளைகள் கொண்ட நுண் பாலிமர்கள், மென்மையாக, அதே சமயம் எதிலும் கெட்டியாக ஒட்டும் தன்மையும் கொண்டுள்ளன.
இந்த நேனோ பாலிமர்களை பசைகள், பூச்சுக்கள், ஜெல்கள் என பல வடிவங்களில் தயாரிக்க முடியும் எனவும் கரோலைனா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், 'நேச்சர் மெட்டீரியல்ஸ்' இதழுக்குத் தெரிவித்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement