Advertisement

காதலிக்காக கத்தும் பறவை

Share

உலகிலேயே அதிக அளவு ஓசையை எழுப்பும் பறவையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 'கரண்ட் பயாலஜி' இதழில் அதைப்பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அமேசான் வனத்தின் வடக்கு பிரேசில் மலைப் பகுதிகளில் வாழும் பறவை அது.

வெண்மணிப் பறவை (புரேக்னியால் ஆல்பஸ்) இனத்தின் ஆண் பறவைகள் எழுப்பும் ஓசை, ராக் இசைக் கச்சேரிகளில் வெளிப்படும் இரைச்சல், மரம் வெட்டும் இயந்திர ரம்பம் ஆகியவற்றைவிட அதிக இரைச்சலைக் கொண்டதாக இருப்பதாக உயிரியலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

ஆண் வெண்மணிப் பறவைகள் அதிகபட்ச குரலெழுப்புவது, அருகே இருக்கும் பெண் பறவைகளைக் கவரத்தான்.ஆண் பறவைகளில் எது மிக அதிகமாக ஓசையை எழுப்புகின்றதோ, அதுதான் பெண் பறவையை வென்று, இன விருத்தி செய்ய முடியும்.அமேசான் காட்டில் இந்தப் பறவைகளை கண்டறிந்த விஞ்ஞானிகளால், அவை கிளப்பும் ஓசையை தாங்க முடியாமல் காதை பொத்திக்கொண்டனர்.

சரி, பெண் பறவைகள் இந்த இரைச்சலை எப்படி சகித்துக் கொள்கின்றன? இந்த காதல் கூப்பாடு எல்லாம் சில நிமிடங்களுக்குத்தான். அதற்குள், அதிக சத்தம் போடும் ஆண் பறவையை, பெண் பறவை தேர்ந்தெடுத்து விடும். பிறகென்ன, அவை தனிமையைத் தேடிப் பறந்து போய்விடுகின்றன.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement