Load Image
Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

பிளாஸ்டிக் வரலாறு



ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியும் பாலிதின் பைகள், தற்போது சுற்றுச்சூழலுக்கு எமனாக உருவெடுத்து உள்ளது. இதனால் இதை தடை செய்ய வேண்டும் என உலகம் முழுவதும் கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் இயற்கை வளத்தை காப்பாற்றும் நோக்கத்துடன் தான் இவை 60 ஆண்டுகளுக்கும் முன் உருவாக்கப்பட்டது. சுவீடன் இன்ஜினியர் ஸ்டென் கஸ்டல் துலின் என்பவர் 1960ல் பாலிதீன் பைகளை உருவாக்கினார். பேப்பர்களுக்காக மரங்கள் வெட்டப் படுவதை கண்ட இவர் இதனை உருவாக்கினார். ஆனால் இன்று இது பூமியை மலடாக்கும் நிலைக்கு உயர்ந்துவிட்டது.

தகவல் சுரங்கம்

நீண்டகால ஆட்சி



உலகில் தற்போதைய ஆட்சியாளர்களில், நீண்டகாலம் பதவியில் இருக்கும் தலைவர் என்ற பெருமையை கேமரூன் அதிபர் பவுல் பியா பெற்றுள்ளார். இவர் 1975 ஜூன் 30 - 1982 நவ.6 வரை கேமரூன் நாட்டின் முதல் பிரதமராக பதவி வகித்தார். பின் 1982 நவ.6 முதல் அந்நாட்டின் அதிபராக பதவி வகித்து வருகிறார். இதுவரை 44 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். உலகில் இவருக்கு அடுத்து நீண்டகாலம் பதவியில் இருப்பவர் ஈக்வடோரியல் கினியா நாட்டின் அதிபர் டியோடோரோ ஒபியாங். இவர் அந்நாட்டின் இரண்டாவது அதிபராக 1979 ஆக.3 முதல் பதவியில் இருக்கிறார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement