அறிவியல் ஆயிரம்
அறிவியல் ஆயிரம்
காக்க வேண்டிய மலை
உலகின் பெரிய காடு அமேசான். இது 'பூமியின் நுரையீரல்' என அழைக்கப்படுகிறது. அமேசான் காடுகளை பாதுகாக்க வேண்டிய அதே நேரத்தில், ஆண்டிஸ் மலைகளையும் பாதுகாக்க வேண்டும் என விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர். தென் அமெரிக்காவில் உள்ள ஆண்டிஸ் மலைத்தொடர், உலகின் நீளமான மலைத்தொடர். இது இமயமலைக்கு அடுத்து, அதிக உயரமான சிகரங்களை கொண்டது. வெனிசுலா, கொலம்பியா, ஈக்குடார், பெரு, பொலிவியா, சிலி, அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் பரவி உள்ளன. உலகில் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆதாரமாக விளங்குகிறது.
தகவல் சுரங்கம்
முதல் நபர்
நோபல் பரிசு 1901ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டாலும், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 1969 முதல் வழங்கப்படுகிறது. இதில் 2009 வரை பொருளாதார நோபல் பரிசுக்கு பெண்கள் தேர்வாகவில்லை. 2009ம் ஆண்டு பொருளாதார நோபல் பரிசுக்கு முதன்முறையாக எலினார் ஒஸ்ட்ரோம் என்ற பெண்மணி தேர்வு செய்யப் பட்டார். 1933 ஆக.7ல் அமெரிக்காவில் பிறந்தார். பி.எச்டி., முடித்த இவர், அரிஜோனா பல்கலையில் பேராசிரியராக பணியாற்றினார். 2012ல் மறைந்தார். இதன்பின் இரண்டாவது பெண்மணியாக 2019ல் அமெரிக்காவின் எஸ்தர் துப்லோ தேர்வாகியுள்ளார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!