dinamalar telegram
Advertisement

பொம்மைகள் செய்வேன் பல நன்மைகள் செய்வேன்

Shareசென்னை நங்கநல்லுாரை சேர்ந்தவர் காத்தியாயினிபாங்க் ஒன்றின் மேலாளராக இருந்தவர், தான் பார்த்துவந்த வேலையை உதறிவிட்டு பராம்பரிய பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார் இவரது தயாரிப்புகள் அமெரிக்கா உள்ளீட்ட பல வெளிநாடுகளில் வரவேற்பை பெற்றுள்ளது.

Border Collie
Border Collie
Border Collie
Border Collie
Border Collie
Border Collie
Border Collie
Border Collie
காத்தியாயினி ப்ரகாஷ்.படித்து முடித்துவிட்டு பாங்க் ஒன்றில் மேலாளராக உத்தியோகம் பார்த்துவந்தார்.இவரது மாமியார் சரோஜா பராம்பரிய முறைப்படி துணியால் பொம்மைகள் செய்யத்தெரிந்தவர்.
இவரிடம் இருந்து பொம்மைகள் செய்யக்கற்றுக் கொண்டு செய்த பொம்மைகளை தெரிந்தவர்களுக்கு கொடுத்தார், நல்ல வரவேற்பு இருக்கவே ஏன் இதையே முழுநேர தொழிலாக செய்யக்கூடாது என்று முடிவு செய்தார்,பார்த்துவந்த வேலையை விட்டுவிட்டு தற்போது முழு நேரமும் பொம்மைகள் செய்துவருகிறார்.
தனது பொம்மை தயாரிப்பு நிறுவனத்தி்ற்கு ‛ஒலைப்பெட்டி' என்று பெயர் வைத்துள்ளார்.சுற்றுச்சுழலுக்கு கேடு தராத பொம்மைகள் மட்டுமே தயாரிப்பது என்று உறுதி கொண்டுள்ளார்.இதன் அடிப்படையி் களிமண் மற்றும் துணி பொம்மைகள் மட்டுமே செய்துவருகிறார்.மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் பொம்மைகள் காணப்படுகின்றன.
இந்த துணி பொம்மைகளில் என்ன மாதிரியான உருவங்களை வேண்டுமானாலும் கொண்டு வரலாம் சேதமடையாது நீண்ட நாட்கள் இருக்கும் பராமரிப்பது எளிது விலையும் குறைவு.
கடந்த ஏழு ஆண்டுகளாக முழு வீச்சில் பொம்மைகள் தயாரித்துவரும் இவர் ராமாயணம்,மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் வரக்கூடிய காட்சிகளை தத்ரூபமாக வடிவமைப்பதில் வல்லவர்.
பிளாஸ்டிக் ஒழிப்பு, மரம் வளர்ப்பு, பராம்பரிய விளையாட்டுகளை நினைவு படுத்தல் போன்ற இவரது பொம்மைகளை பள்ளிகளில் கண்காட்சியாக வைக்கிறார்கள். அதே போல திருமணம் நடைபெறும் வீடுகளில் திருமணத்தின் போது நடைபெறும் சடங்குகளை வரிசையாக காட்சிப்படுத்துகின்றனர்.இந்த அடிப்படையிலான இவரது பொம்மைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
தமிழகத்தில் உள்ள பல கிராம மக்களுடன் தொடர்பு கொண்டு அவர்களை பனை ஒலை பொருட்களை தயார் செய்யச் சொல்லி வாங்கிக் கொள்கிறார்.பனைஒலையால் செய்யப்படும் பல்வேறு விதமான ஒலைப்பெட்டிகளுக்கு எப்போதுமே டிமாண்டு உண்டு.அசாம்,நாகலாந்து போன்ற வட மாநிலங்களுக்கு சென்று அங்கு மட்டுமே கிடைக்கக்கூடிய சணல் பொருட்களை பொம்மைகளை வாங்கிவந்து விற்கிறார்.
இதன் காரணமாக நேரிடையாகவும் மறைமுகமாகவும் ஐம்பது குடும்பங்களுக்கு இவரால் வாழ்வாதாரம் கிடைத்துவருகிறது.வருடம் முழுவதும் பொம்மைகள் தயாரிப்பில் பிசியாக இருக்கும் இவர் நவராத்திரி போன்ற நாட்களில் இன்னும் பிசியாகிவிடுவார்.
புதுமையானதும்,தரமானதுமான இவரது பொம்மைகளை அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாட்டில் உள்ளவர்கள் விரும்பி வாங்கிவருகின்றனர்.சாய் சரித்திரா என்ற சாய்பாபா கதை சொல்லும் பொம்மைகளும் ,மெரினா கடற்கரை வாழ் சிறு வியாபாரிகள் பொம்மைகளும் இந்த வருடம் பிரபலமாகிவிட்டது.
பாங்கில் வேலை பார்த்து இருந்தால் நான் மட்டுமே நன்றாக இருந்திருப்பேன் இப்போது என்னைச் சுற்றி உள்ள பல குடும்பத்தினருடன் சேர்ந்து நானும் நன்றாக இருக்கிறேன், என்னால் இவ்வளவு பேர்களுக்கு வேலை கொடுக்க முடிவதை எண்ணி மகிழ்கிறேன் அதை விட பாரம்பரியமான நமது கலைகள் வளர நானும் கரம் கொடுக்கிறேன் என்பதில் இன்னும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று சொல்லும் காத்தியாயினிடம் பேசுவதற்கான எண்:9841695164.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.inShare
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement