Advertisement

மெல்ல நடந்தால் சீக்கிரம் வயதாகும்!

ஒருவரது நடையை, அவரது பொது உடல் நலத்தின் அளவுகோலாக பார்ப்பது, மருத்துவ உலகில் ஏற்கப்பட்ட முறை தான். ஆனால், நடையின் வேகத்திற்கும், வயது ஆகி மூப்படைவதற்கும் உள்ள தொடர்பை அமெரிக்கா, டென்மார்க், நியூசிலாந்து, பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு உறுதி செய்துள்ளது.

கடந்த, 1970களில் பிறந்து தற்போது, 45 வயதை தாண்டிய, 904 பேரிடையே நடத்தப்பட்ட ஆய்வின் தரவுகளை எடுத்து, விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். அவர்களில் மெதுவாக நடப்பவர்களுக்கும், வேகமாக நடப்பவர்களுக்கும் உள்ள உடல் நல குறியீடுகளையும், மன நல குறியீடுகளையும் ஆராய்ந்தபோது, மெதுவாக நடப்பவர்களின் மூளை எடை, அடர்த்தி ஆகியவை குறைவாக இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

இவர்களின் பிற உடல் நல காரணிகளும் சற்று பிந்தியே இருந்தன. இவர்கள், 45 வயதிலேயே மூப்பிற்குரிய அறிகுறிகள் தட்டுப்பட ஆரம்பித்திருப்பதை விஞ்ஞானிகள் கவனித்தனர். எனவே, ஒருவர் மெதுவாக நடப்பவர் என்றால், அவருக்கு சீக்கிரமே வயதாக வாய்ப்புகள் அதிகம் என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

  • Govindaswamy Nagarajan - Nashville, Tennessee,யூ.எஸ்.ஏ

    My date of birth is 10-11-1931. I am a Professor for life at the Tennessee State University, Nashville, Tennessee, USA from 1980. I teach for 4 days at the university and do exercise for 3 days at the YMCA Gymnasium. I walk on the treadmill for 1 hour at a speed of 2.5 miles/hour. I do yoga asnas and other body exercises for 1 hour. Finally I climb 930 electronic steps in 35 minutes. My weight is 155 lbs and Blood pressure is 109/56 which is very low. The pressure density for my eyes is 10 and 12. I am an exception to the findings reported here. Walking is the best exercise, low or fast. Please ignore these findings reported here, and do your best for your healthy and peaceful life.

  • Vijayakumar - Erode,இந்தியா

    எப்போதும் சுறுசுறுப்பா இருக்கணும்னு சொல்லுறீங்க , அது சரி தான் .... சுறுசுறுப்பா இருந்தா இளமையா இருக்கலாம்.

  • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

    எங்க வீட்டுக்கூட ஒரு அக்காகாரவுங்க வருவங்கள்ல அவங்கதா சொல்லீகொடுத்தாங்க

  • kalyanasundaram - ottawa,கனடா

    IN GENERAL HOW CAN YOU EXPECT A 80 YEAR OLD TO WALK FAST. BUT AGE RELATED PROBLEMS ARE FOR ALL SENIOR CITIZENS

    • crap - chennai,இந்தியா

      ஐயா, 1990 -களில் எங்கள் உறவினர் தாத்தா ஒருத்தர் இருந்தார். 87 -வயதில் அவர் நடக்கும் நடை வேகத்திற்கு கல்லூரியில் படித்த எங்களால் கூட நடக்க முடியாது. காலையில் கிராமத்தில் உள்ள அத்தனை கோவில்களுக்கும் சென்று பிரகாரம் சுற்றுவார். ஒவ்வொரு பிள்ளையார் முன்பும் நின்று 12 தோப்புக்கரணம் (87 -வயதில்) போடுவார். 93 -வயதில் இறைவனடி சேர்ந்தார். அப்படி வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement