Advertisement

பிரிட்டன் காட்டும் சூழியல் ஆர்வம்!

பெட்ரோலிய, நிலக்கரி எரிசக்திகளுக்குக்கு மாற்றாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துவதில் தீவிரம் காட்டும் நாடுகளில் பிரிட்டன் முதன்மை வகிக்கிறது.நிலக்கரியின் பயன்பாட்டை படிப்படியாக குறைத்துவரும் பிரிட்டன், கடந்த காலாண்டில் ஒரு புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. அந்த காலகட்டத்தில் அந்தநாட்டுக்குத் தேவையான வெப்ப ஆற்றல் மற்றும் மின் ஆற்றல் ஆகியவற்றை பெட்ரோலிய எரிபொருட்களிலிருந்து தயாரிப்பதை விட, அதிக அளவில் புதுப்பிக்கத் தக்க ஆற்றல்களிலிருந்து தயாரித்து சாதித்துள்ளது.கடந்த காலாண்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திகள் மூலம் 29.5 டெரா வாட் ஆற்றலை பிரிட்டன் உற்பத்தி செய்துள்ளது. அதே சமயம் பெட்ரோலிய எரிசக்தி மூலம் 29.1 டெரா வாட் ஆற்றலை உற்பத்தி செய்துஉள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலில், 20 சதவீதத்தை கடலில் மிதக்கும் காற்றாலைகள் மூலம் பிரிட்டன் உற்பத்தி செய்துள்ளது என, 'கார்பன் பிரீப்' என்ற அமைப்பு தெரிவித்து உள்ளது.ஆனால் ஒன்று, பிரிட்டனின் ஆற்றல் தேவையில், 19 சதவீதம், சர்ச்சைக்குரிய அணு சக்தி மூலமே பெறப்படுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement