Advertisement

வீட்டின் ஓட்டை பிரித்து முதுகுளத்துாரில் கொள்ளை

முதுகுளத்துார்:-முதுகுளத்துார் அக்ரஹாரம் தெருவில் பூட்டிய வீட்டின் ஓடுகளை பிரித்து மர்மநபர்கள் பணம், நகைகளை கொள்ளையடித்துசென்றனர்.
முதுகுளத்துார் அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர்செந்துார்ஜோதி. இவரதுமனைவி அமுதா 45.மாவு விற்பனை செய்து வருகிறார்.இரண்டு நாட்களுக்கு முன்பு மகளை பார்ப்பதற்காக புதுக்கோட்டை சென்றுள்ளார்.இதைஅறிந்த மர்மநபர்கள் பூட்டிய வீட்டின் ஓடுகளை பிரித்துஉள்ளே சென்றுபணம்,நகையை திருடி சென்றுள்ளனர்.அமுதா வீட்டிற்குவந்து பார்த்தபோது வைத்திருந்த பணம்,நகைதிருட்டு போனதால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.வீட்டில் இருந்த 10 கிராம் நகை, 18 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அமுதா புகாரில் முதுகுளத்துார் எஸ்.ஐ., சக்திவேல்சம்பவ இடத்தில் மோப்பநாய் உதவியுடன் விசாரணை செய்தார்.திருடிய மர்மநபரை தேடிவருகிறார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement