ஒரு கட்டடத்தில், நான்கு சுவர்களுக்குள் யாராவது மறைந்திருக்கிறார்களா, எத்தனை பேர் மறைந்துள்ளனர் என்பதை கண்டறிய, அன்றாடம் பயன்படும், 'வை-பை' சமிக்ஞைகளை வைத்தே கண்டறியலாம். இதற்கான புதிய தொழில்நுட்பத்தை அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.கிராஸ் மாடல் ஐ.டி., எனப்படும் இந்த தொழில்நுட்பம் சந்தேகத்திற்குரிய அறையின் சுவர்களை நோக்கி வை-பை சமிக்ஞை செலுத்தி மற்றும் சமிக்ஞை வாங்கி ஆகிய கருவிகள் பொருத்தப்படும்.
அந்த சமிக்ஞை சுவர்களைக் கடந்து செல்லக்கூடியவை. அதே சமயம் அவை குறுக்கிடும் பொருட்கள், நபர்களால் சிறிது பலகீனமும் அடையும். இந்த விகிதத்தை வைத்து, அறைக்குள் நபர்கள் இருக்கிறார்களா, எத்தனை பேர் என்பதை அறிய முடியும்.இன்னும் ஒருபடி மேலே போய், கண்காணிப்பு கேமிராவில் பதிவானோரின் நடையையும், அறைக்குள் இருப்போரின் நடையையும் ஒப்பிட்டுப் பார்த்து, இன்ன நபர் தான் அறைக்குள் பதுங்கியிருக்கிறார் என்பதையும் கண்டறிய கிராஸ் மாடல் ஐ.டி., தொழில்நுட்பம் உதவும்.இதை தீவிரவாத தாக்குதல் முதல், நகைக் கடை திருட்டு வரை பலவற்றிலும் குற்றவாளிகளை கண்டறிய பயன்படுத்தலாம்.
ஒளிந்திருப்பவரை கண்டறியும் 'வை-பை'
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!