Advertisement

சனி கிரகத்திற்கு நிலாக்கள் கூடுகின்றன

Share

அண்மைய விண்வெளி ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகளையடுத்து, விண் கற்களால் ஆன வளையத்தைக் கொண்டிருக்கும் சனி கிரகத்தை சுற்றி வரும் துணைக் கோள்களின் எண்ணிக்கை, 62 ஆக இருந்தது.

உலகெங்கும் உள்ள விண்வெளி ஆய்வாளர்கள் தொடர்ந்து புதிய நிலவுகளை கண்டுபிடித்து வருகின்றனர். இவர்கள், 20 புதிய நிலவுகளை கண்டு பிடித்துள்ளனர். இதனால், சனி கிரகத்தை சுற்றி வரும் துணைக் கோள்களின் எண்ணிக்கை, 82 ஆக உயர்ந்துள்ளது.

சில மாதங்கள் முன்பு வரை, அதிகமான துணைக் கோள்களைக் கொண்ட கிரகமாக இருந்தது வியாழன் கிரகம் தான். இதை, 79 துணைக் கோள்கள் சுற்றி வருகின்றன.அடுத்தடுத்து சனிகிரகத்தைச் சுற்றிதுணைக் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டதால்,அவற்றுக்கு பெயர் சூட்ட ஒரு போட்டியை அறிவித்திருக்கிறது அமெரிக்காவிலுள்ள கார்னகி மெலன்பல்கலைக்கழகம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement