Advertisement

தகவல் துகள்கள்

கார்பன் பேட்டரி
காற்றில் மாசுபாடாகக் கலக்கும் கரியை வைத்து மின்னேற்றக் கலனை உருவாக்கியுள்ளனர் அமெரிக்காவின் இல்லினாய் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
இவர்களின் சோதனையில், லித்தியம்-கார்பன் டையாக்சைடு மின்கலனை, 500 முறை மின்னேற்றம் செய்து பயன்படுத்த முடியும். தவிர, தற்போது பரவலாக பயன்படுத்தப்படும் லித்தியம் அயனி மின்கலன்களைவிட ஏழு மடங்கு மின்சாரத்தை தேக்கி வைக்கும் திறன், தங்கள் கண்டுபிடிப்புக்கு உண்டு என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ட்ரோன் பார்சல் சேவை
அமெரிக்க துாதஞ்சல் சேவையான யு.பி.எஸ்., தற்போது அந்நாட்டு அரசிடம் சிறப்பு அனுமதியை முதல் முறையாக பெற்றுள்ளது. இதனையடுத்து, ஆளின்றி பறக்கும் ட்ரோன்கள் மூலம் ஒரு நாளைக்கு எத்தனை அஞ்சல் மற்றும் சரக்கு பெட்டிகளையும் யு.பி.எஸ். தனது முகவரிதாரர்களுக்கு எடுத்துச் சென்று போட்டுவிட்டு வரலாம்.
கடந்த சில ஆண்டுகளாக, பரிசோதனை அளவில் ட்ரோன்களை பயன்படுத்த மட்டுமே யு.பி.எசுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது கட்டுப்பாடுகள் முழுவதும் நீக்கப்பட்டிருப்பதால், இனி உலகமெங்கும், துாதஞ்சல் நிறுவனங்கள் மத்தியில் ட்ரோன்களை பயன்படுத்துவது பரவலாகும் என எதிர்பார்க்கலாம்.

விண்வெளியில், 'பீப் பிரை'
அண்மையில், சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில், செயற்கை முறையில் மாட்டு இறைச்சியை 'வளர்த்து' வெற்றி கண்டுள்ளனர். விண்வெளி நிலையத்திற்கு மாட்டைக் கொண்டு போக முடியாது. அதேபோல, 1 கிலோ மாட்டிறைச்சியை உருவாக்கத் தேவைப்படும் 15,000 லிட்டர் தண்ணீரும் அங்கே கிடையாது.
பின்னே எப்படி? இஸ்ரேலைச் சேர்ந்த 'அலெப் பார்ம்ஸ்' (Aleph Farms), மாட்டின் செல்களை ஆய்வகத்தில் வைத்து, அவற்றுக்கு ஊட்டச் சத்துக்களை வழங்கி வளர்த்து ஆய்வக மாட்டிறைச்சியை உருவாக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது.
இந்த தொழில்நுட்பத்தைத் தான், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு, அண்மையில் அது அனுப்பியது. சில மாட்டிறைச்சி செல்கள், முப்பரிமாண உயிரி அச்சியந்திரம் ஆகியவற்றை பூமியிலிருந்து அனுப்பியது, அலெப் பார்ம்ஸ்.
அந்த கருவிகளை வைத்து விண்வெளி வீரர்கள் சோதனை செய்து, முதல் முறையாகபுவியீர்ப்பு விசை குறைவான சூழலில் ஆய்வக மாட்டிறைச்சியை உருவாக்கியுள்ளனர். வருங்காலத்தில், விண்வெளி வீரர்கள், பீப் பிரை,பீப் பர்கர் போன்றவற்றை பிரஷ்ஷாக செய்து சாப்பிட முடியும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Indhiyan - Chennai,இந்தியா

    அதை பூமியில் எல்லா நாடுகளிலும் கொண்டு வந்தால், ஆடு, மாட்டை கொலை செய்யாமல் கறி சாப்பிடலாம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement