Advertisement

மழையால் இடிந்தது அங்கன்வாடி மேற்கூரை

வத்தலக்குண்டு, சேவுகம்பட்டி பேரூராட்சி நாகலாபுரம் அங்கன்வாடி சமையலறையில் மேற்கூரை இடிந்து விழுந்தது.சேவுகம்பட்டி பேரூராட்சி நகலாபுரத்தில் உள்ள அங்கன்வாடி மையம் 1980 களில் கட்டப்பட்டது. 40 ஆண்டுகளை நெருங்குவதால் கட்டடம் பலமிழந்து உள்ளது. ஜன்னல், தளவாட சாமான்கள் பயன்பாடின்றி உள்ளன.இதுகுறித்து சேவுகம்பட்டி பேரூராட்சி,ஒன்றியம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகிய அலுவலகங்களில் பலமுறை தெரிவித்துள்ளனர். எந்தத் துறையினரும் கண்டுகொள்ளவில்லை.இந்நிலையில் கடந்த வாரம் 3 நாட்களாக மழை பெய்ததில் அங்கன்வாடி சமயலறை மேற்கூரை இடிந்து விழுந்தது. விடுமுறை தினத்தில் இடிந்து விழுந்ததால் ஆள் இல்லாத நிலையில், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. கழிப்பறை பல ஆண்டுகளாக பயன்பாடின்றி உள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் புதிய கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement