Advertisement

போலீஸ் செய்திகள்

Share

நகைபறிப்பு திருடர்கள் கைதுமதுரை: ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோட்டைச் சேர்ந்தவர் சங்கரேஸ்வரி 51. நேற்றுமுன்தினம் பகல் 12:15 மணிக்கு அப்பகுதியில் நடந்து வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த பாபு 42, காமாட்சி 44, ஆனந்த் 35, ஆகியோர் கத்தியை காட்டி 2 பவுன் நகையை பறித்ததாக கைது செய்யப்பட்டனர்.வீட்டில் திருட்டுமதுரை: கூடல்நகரைச் சேர்ந்தவர் சீத்தாராஜன் 58. தெற்கு ரயில்வே அக்கவுண்ட் பிரிவு அதிகாரி. இவரது வீட்டினுள் புகுந்த மர்மநபர்கள் 33 பவுன் நகைகள், வைர நகைகள், 500 கிராம் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.மஸ்தான்பட்டி செல்வம் 39. இவரது வீட்டிலும் 2 பவுன் நகைகள், ரூ.6 ஆயிரம் திருடப்பட்டது. அண்ணாநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.பஸ் மறியல்மேலுார்: அட்டப்பட்டியில் அம்பேத்கர், திருமாவளவன் உள்ளிட்டோரின் படங்களை அவமதித்ததை கண்டித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் மேலுார்-சிங்கம்புணரி ரோட்டில் 20 நிமிடம் பஸ் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது. டி.எஸ்.பி., சுபாஷ் சமரசம் செய்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.திருடியவர் கைதுசோழவந்தான்: ஆலங்கொட்டாரம் முத்துலட்சுமி 36. நேற்று முன்தினம் வீட்டில் ரூ.5 ஆயிரம் மற்றும் அலைபேசி திருடுபோனது. இதுதொடர்பாக பழங்காநத்தம் பீர்முகமதுவை 35, போலீசார் கைது செய்தனர்.டிரைவர் இறப்பில் மர்மம்மேலுார்: கரையிப்பட்டி லாரி டிரைவர் சர்க்கரை முகம்மது 35. மேலுார் அரசு மருத்துவமனையில் பிறந்த தனது குழந்தையை பார்த்துவிட்டு டூவீலரில்நேற்றுமுன்தினம் இரவு ஊருக்கு திரும்பினார். ெஹல்மெட் அணியவில்லை. இந்நிலையில் உடலில்காயங்களுடன் கீழையூர் ஆசாரி ஊருணி கரையில் இறந்து கிடந்தார். கீழவளவு போலீசார் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.வேன் மோதி பலிதிருமங்கலம்: ஆலம்பட்டி மகாராஜான் 62. ராஜபாளையம் ரோட்டில் பாய்ஸ் டவுன் அருகே ரோட்டை கடக்க முயன்ற போது ஆலம்பட்டியில் இருந்து திருமங்கலத்திற்கு சென்ற வேன் மோதி இறந்தார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement