Advertisement

செவ்வாயில் கேட்கும் ஓசைகள்!

செவ்வாய் கிரகத்தை வட்டமிட்ட மங்கள்யான், அங்கு வீசும் புயல் காட்சிகளை படம் படித்து பூமிக்கு அனுப்பி அசத்தியது. அதேபோல, அமெரிக்காவின் நாசா அனுப்பிய இன்சைட் என்ற ஊர்தி, அண்மையில் செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் ஓசைகளை பூமிக்கு அனுப்பிஉள்ளது.
செவ்வாயின் வளி மண்டலத்தில் ஏற்படும் காற்றுவீச்சின் ஓலம், செவ்வாய் மண், கற்கள் உரசும் ஓசை, இன்சைட் லேண்டர் ஊர்தியின் உலோகக் கருவிகள், வெப்பமடைந்து மீண்டும் குளிர்ச்சி அடையும்போது எழும் உலோக சப்தங்கள் என்று பல ஓசைகளை இன்சைட் ஊர்தி ஒலி வடிவில் அனுப்பியுள்ளது.
இவற்றோடு இதுவரை, செவ்வாய் தரைப் பரப்பில் ஏற்பட்ட, 21, நில அதிர்வுகளையும், இன்சைட்டிலுள்ள நில அதிர்வு அளக்கும் கருவி பதிவு செய்து அனுப்பியுள்ளது.
காட்சி யுகமான இந்தக் காலத்தில், வேற்றுகிரகத்தில் ஏற்படும் ஓசைகளைக் கேட்பதும் அதிசயமாக இருப்பது விநோதம் தான்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (9)

  • மீனா தேவராஜன் - singapore,சிங்கப்பூர்

    உதடுகள் சிவந்த செவ்வாயிலிருந்து ஒலி வருவது என்ன அதிசயமா? வாயில்தானே ஒலி வெளிவரும். எப்படி நம்ம ஜோக்.

  • magan - london,யுனைடெட் கிங்டம்

    மேலே குறிப்பிட்ட அணைத்து கருத்துக்களும் அறிவியல் பூர்வமான உண்மையான கருத்துக்கள் அருமை

  • oce - kadappa,இந்தியா

    வளி மண்டல காற்றுக்கு உயிர்ப்பு சக்தி இல்லை. ஆனால் பூமிக்கு அருகே புவி ஈர்ப்பு எல்லை வரை இருக்கும் காற்றில் பிராணவாயு கலந்துள்ளது. அது வரை மனிதர்கள் மூச்சு விடமுடியும்..

  • oce - kadappa,இந்தியா

    வளி மணெடலத்தில் காற்று உள்ளது. தாவரங்கள் மூலம் மனிதர்க்கு கிடைக்கும் காற்றில் பிராண வாயு உள்ளது. வளி மண்டல காற்றில் அது இல்லை. பல கோடி மைலகளுக்கு அப்பாலிருக்கும் சூரியனது உஷ்ணம் நம் மீது சுரீர் என படுகிறதே அது எப்படி. அந்த சூரிய உஷ்ணத்தை சும்ந்து வந்து பூமிக்கு தருவது பிரபஞ்ச காற்றே. காற்ற்ற வெற்றிடத்தில் எதுவும் திடப் பொருளாக நிற்காது. . பல கிரகங்களும் நட்ச்த்திரங்களும் இப்படித்தான் நிலை பெற்றுள்ளன.

  • oce - kadappa,இந்தியா

    ஒரு திடப்பொருள் மீது நடந்து போனால் காரில் மற்றும் வண்டிகளில் போனால் கி.மீ கணக்கு வருகிறது. ஆனால் அந்த கி.மீ கண்க்கு வானில் எந்த ஆதாரமும் இன்றி பறந்து செல்லும் போது அடி படுகிறது. அங்கே வேகம் அதிகம். தரையில் ஒரு இரண்டு கி.மீ நடந்தால் மனிதர்க்கு டையர்டுனெஸ் வருகிறது. வானில் பல ஆயிரம் கி.மீ தூரம் பறந்து சென்றால் அந்த டையர்டு னெஸ் வராது.

  • oce - kadappa,இந்தியா

    செவ்வாயின் தரையிலிருந்து பல வகை ஒலி கேட்கிறது என்றால் அங்கே காற்று இருக்கிறது என்று அரத்தம். காற்றிருந்தால் நெருப்பிருக்கும். மேக்ம் இருக்கும். மேகமிருந்தால மழையும் பெய்யும் செவ்வாய் பூமியில் பயிர் பச்சைகள் இருக்கும். புல் முளைத்திருக்கும். மனிதர் வாழ்வதற் கேற்ற இடம் செவ்வாய்.

  • THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா

    225 மில்லியன் கிலோமீட்டர் ( 22 கோடியே, 50 லட்சம் கிலோமீட்டர் ) தூரத்திலுள்ள செவ்வாய் கிரகத்தில் உண்டான ஒலிகளை நம் பூமியில் கேக்கும்படி செய்யும் இந்த விஞ்ஞான வளர்ச்சியை என்னவென்று சொல்வது மிகுந்த ஆச்சரியம்தான். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.

  • bal - chennai,இந்தியா

    atmosphere வளி மண்டலம் காற்று இல்லாத ஒன்று...எப்படி ஓசை கேட்கும்...ஹாலிவுட் படம் போல இருக்கு.

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    இது விஞ்ஞானத்தின் அசுரவளர்ச்சியை காட்டுகிறது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement