Advertisement

பா.ஜ.,விடம் தி.மு.க.,வினர் சமரசம்?

Share

மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, வேலுார் வி.ஐ.டி., பல்கலைக் கழகத்தின், 34வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, அங்கு வந்தார். வேலுார் லோக்சபா தொகுதி எம்.பி., கதிர் ஆனந்த் மற்றும் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் காந்தி, கார்த்திகேயன், ஈஸ்வரப்பன் ஆகியோர், பா.ஜ., மற்றும் அ.தி.மு.க.,வினரோடு போட்டி போட்டு, நிதின் கட்கரிக்கு பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.

இதை பார்த்த பொதுஜனம் ஒருவர், 'மத்தியில் ஆளும் பா.ஜ.,விடம் மோதல் போக்கு கடைபிடித்தால், எதுவும் சாதிக்க முடியாது என்பதால், தி.மு.க.,வினர் சமரச போக்கு கடைபிடிக்கிறாங்க பாரு...' என, அருகில் இருந்தவரிடம் முணுமுணுக்க, அவரும் ஆமோதித்தார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement