Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

Share

'ஓ... பா.ஜ.,வுடன், தி.மு.க., நெருக்கமாறது தெரிஞ்சதும், நீங்க, 'கழண்டுக்க' தயாராகுறீங்களோ...' என, கிண்டலாக கூறும் வகையில், தமிழக வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேச்சு: வேலுார் லோக்சபா தேர்தலில், குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில், அ.தி.மு.க., தோல்வி அடைந்தது. அதற்கு காரணம், மத்திய அரசு நிறைவேற்றிய, 'முத்தலாக்' தடைச் சட்டம் தான். அந்த சட்டத்தால் தான், நாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்தோம்.

****

'போராட்டம் நடத்த வேறு காரணம் கிடைக்காததால், பொருளாதார விவகாரத்தை கையில் எடுத்துள்ளீர்களா...' என, கேட்கத் தோன்றும் வகையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை: மத்திய அரசின் மோசமான பொருளாதார கொள்கைகளால், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, நாடு மோசமான நிலையை அடைந்துள்ளது. இதனால், மத்திய அரசை கண்டித்து, இம்மாதம், ௧௬ல், தமிழக மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

****

'உங்கள் கோரிக்கை, நியாயமானது; பாராட்டத்தக்கது' என, கூறத் தோன்றும் வகையில், த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: முதியோரை யாரும், அவமதிக்க அனுமதிக்கக் கூடாது. முதியோரின் சுயமரியாதை மற்றும் நலனை பாதிக்கும் வகையில் யாரேனும் செயல்பட்டால், அவர்கள் மீது, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், முதியோர் நலனுக்காக கூடுதல் நிதி ஒதுக்கி, அவர்கள் சுதந்திரமாக வாழ உறுதுணையாக இருக்க வேண்டும்.

****

'நீங்க சொன்னா சரியாகத் தான் இருக்கும்' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு: காஞ்சி சங்கர மடம் கல்வி, மருத்துவம், ஆன்மிகம் ஆகியவற்றில், நாடு முழுவதும் செய்து வரும் சேவை, மிகுந்த பாராட்டுக்குரியது; மகத்தானது. விரைவில் சங்கர மடம், அரசு உதவியுடன், மருத்துவக் கல்லுாரியையும் துவக்கி, கிராம மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும்.

****

'அதனால் தான் அவரை, 'நடிகர் திலகம்' என பாராட்டுகின்றனர்' என, சொல்லத் தோன்றும் வகையில், நடிகர் சிவகுமார் அறிக்கை: எந்த காட்சியில் நடித்தாலும், உணர்ச்சியின் உச்சத்தை தொடுபவர், சிவாஜி கணேசன். உயர்ந்த மனிதன் படத்தில், திருட்டு பழி சுமத்தப்பட்ட என்னை, பிரம்பால் அடிக்க வேண்டும் என்பது காட்சி. அதில் தத்ரூபமாக நடித்த சிவாஜி, நான்கு துண்டுகளாக பிரம்பு தெறிக்கும் அளவுக்கு என்னை, உண்மையிலேயே அடித்து விட்டார். அவரைக் கட்டுப்படுத்த உடன் நடித்த நடிகையர், சவுகார் ஜானகி, பாரதி எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement