Advertisement

'டவுட்' தனபாலு

பிரதமர் மோடி: தமிழர்களின் நாகரிகம் பழமையானது. விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றவர்கள் தமிழர்கள். அனைவரும் சோர்வின்றி, உற்சாகத்துடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கிறீர்கள். இதற்கு காரணம், தமிழர்களின் காலை உணவான இட்லி, வடை, சாம்பார் தான்!

டவுட் தனபாலு: விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற தமிழர்கள் தான், சமூக வலைதளங்களில், 'கோ பேக் மோடி' என, உங்களைத் திரும்பிப் போகச் சொல்லி பிரசாரம் செய்தனர். அதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். ஆனால், காலையில், இட்லி, வடை, சாம்பரை, பெரும்பாலான தமிழர்கள் மறந்து, ரொம்ப காலமாகி விட்டது. காலையில் ஓட்ஸ் கஞ்சி, மதியம், நார்த் இந்தியா மீல்ஸ், இரவில், ஆலு பரோட்டா, நான், ரொட்டி என மாறியதை நீங்கள் அறியவில்லையோ என்பதே என், 'டவுட்!'

***

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: 'இது, முதல்வரின் லாரி' என, மிரட்டும் அளவுக்கு, மணல் கொள்ளையர்கள், முதல்வர் பெயரை பயன்படுத்தி, அராஜகத்தில் ஈடுபடுகின்றனர். தமிழக ஆட்சி, இ.பி.எஸ்., கையிலா; மணல் கொள்ளையர் கையிலா என்ற சந்தேகம் எழுகிறது.

டவுட் தனபாலு: உங்கள் கட்சி ஆட்சியில், இதை விட நிலைமை மோசம். ரயில், விமானம் தவிர்த்து, பைக்குகள், ஆட்டோக்கள், லாரிகள், பஸ்கள் என, அனைத்திலும், 'தளபதி' என்றும், 'அஞ்சாநெஞ்சன்' என்றும், 'உதயசூரியன்' சின்னத்தை வரைந்தும் அட்டூழியம் செய்தவர்களை, தமிழக மக்கள் மறந்திருப்பர் என்பது, உங்கள் எண்ணமா என்பதே, என், 'டவுட்!'

***

பத்திரிகை செய்தி: ஆளுமை மிக்க, 100 இந்தியர்கள் பட்டியலில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, 30வது இடம் கிடைத்துள்ளது. தமிழக முதல்வர், இ.பி.எஸ்.,சுக்கு, 43வது இடம் கிடைத்துள்ளது.

டவுட் தனபாலு: 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளேடு நடத்திய கணிப்பில், முதலிடத்தை, பிரதமர் மோடியும், இரண்டாவது இடத்தை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் பெற்றுள்ளனர். தமிழக முதல்வர், இ.பி.எஸ்.,சை விட நீங்கள் முன்னே உள்ளீர்கள்; பாராட்டுகள். ஆனால், உங்களின் கூட்டணி கட்சியான காங்., முன்னாள் தலைவர் ராகுல், 25வது இடத்தில் உள்ளாரே, அதை கவனிக்க மறந்து விட்டீர்களா அல்லது கவனித்தும் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டீர்களா என்பதே, இப்போதைய, 'டவுட்!'

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement