Advertisement

தகவல் துகள்கள்!

Share

ஒளிர்ந்த கருந்துளை
அமைதியாக இருந்த ஒரு கருந்துளை, திடீரென சுறுசுறுப்பாகி, அருகில் கடக்கும் நட்சத்திரங்களை கபளீகரம் செய்வதுண்டு. இப்படி ஒரு கருந்துளை, பிரகாசிக்கும் அணுக் கருவாக மாறினால், அதை, 'குவாசார்' என்பர்.
அத்தகைய ஆறு குவாசார்கள் ஒளிர்வதை, அமெரிக்காவின் பாலோமர் தொலைநோக்கியகத்தில், விஞ்ஞானிகள் பார்த்துள்ளனர்.
பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழ வேண்டிய இது, ஆறே மாதங்களுக்குள் நடந்துவிட்டதும் விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஈறு கெட்டால் ரத்தம் கொதிக்கும்
பற்களை தாங்கும் ஈறுகளுக்கும், ரத்த அழுத்த நோய்க்கும் தொடர்பு இருக்கலாம் என்கிறது, 'கார்டியோ வாஸ்குலர் ரிசர்ச்' ஆய்விதழ். ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருக்காதவர்களுக்கு, உயர் ரத்த அழுத்தம் வரும் வாய்ப்பு அதிகம் என்கிறது, அந்த இதழில் வெளியான ஆய்வு.

கரியுறிஞ்சி பெட்டி
நிறைய மரங்களை வளர்க்க வேண்டும் என்பதற்கு, அவை காற்றிலுள்ள கார்பன் - டை -ஆக்சைடை உள்வாங்கி, ஆக்சிஜனை வெளியிடுபவை என்பது தான்.
ஆனால், 'ஹைப்பர்ஜையன்ட் இன்டஸ்ட்ரீஸ்' உருவாக்கியுள்ள, 'இயோஸ்' என்ற, 'பயோ ரியாக்டர்' கருவி, 1 ஏக்கர் மரங்கள் உள்வாங்கும் கார்பன் - டை - ஆக்சைடைவிட, பன்மடங்கு கார்பன் - டை - ஆக்சைடை உள்வாங்குகிறது.
குளிர்சாதனப் பெட்டி போல இருக்கும் இயோஸ் பயோ ரியாக்டருக்குள் வளரும், 'குளோரெல்லா வல்காரிஸ்' என்ற பாசி தான், கார்பன் - டை - ஆக்சைடை
உள்வாங்குகிறது.

எண்ணத்தை படிக்கும் தொழில்நுட்பம்
மூளையில் நினைப்பதை, கணினிக்கு புரியவைக்கவும், கருவிகளை எண்ணத்தாலேயே இயக்கவும் உதவுவது தான், கணினி- மனித இடை முக தொழில்நுட்பம்.
கடந்த சில ஆண்டுகளாகவே, இத்தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் ஆராய்ச்சியில், நேரடியாகவே இறங்கியது பேஸ்புக்.
அடுத்தடுத்து பல புதிய கண்டுபிடிப்புகளை, 'பேஸ்புக்' அறிவிக்கவும் செய்தது. இதன் தொடர்ச்சியாக, அண்மையில், 'கண்ட்ரோல் லேப்ஸ்' (CTRL -Labs) என்ற, 'ஸ்டார்ட் அப்' நிறுவனத்தை, பேஸ்புக் விலைக்கு வாங்கியுள்ளது.
விபத்தால் அங்கங்கள் பாதிக்கப்பட்டோர், மூளை தாக்குதலால் பேச்சு, செயல் இழந்தோர் போன்றோருக்கே இந்த தொழில்நுட்பத்தை ஆராய்வதாக பேஸ்புக் சொல்கிறது.
சமூக வலைதளத்தில் பதிவுகள் இடுவது முதல், மெய்நிகர் தொழில்நுட்பங்களை எளிதாக பயன்படுத்துவது வரை சொந்த நோக்கிற்கு தான் மனித- கணினி இடைமுகத்திற்கு, பேஸ்புக் முக்கியத்துவம் தருகிறது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement