Advertisement

பல வித்தைகள் தெரிந்த பத்மநாதன்

Share

ஒவ்வொரு மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை திநகர் பஸ்நிலையம் மற்றும் அருகில் உள்ள ஸ்டெனோகிராபர்ஸ் கில்டு வளாக கட்டிடத்தில் நடைபெறும் திநகர் நகைச்சுவை மன்ற

கூட்டத்திற்கு செல்வதுண்டு.இரண்டு காரணங்கள் ஒன்று சிரித்து மகி்ழ்வதற்கு இரண்டாவது காரணம் என்னை எழுத துாண்டும்படியான குணாதிசயங்கள் கொண்டவர்கள் யாரேனும் வருவர்.

கடந்த மாத கூட்டத்தில் அப்படி என்னை கவர்ந்தவர்தான் பத்மநாதன்.

ஆவடியைச் சார்ந்தவர் ஒய்வு பெற்ற அரசு ஊழியர் ஒய்விற்கு பிறகு தனக்கும் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய விஷயங்களில் ஈடுபாடுகாட்டி வருகிறார்.
எனக்கு ஒரு ஐந்து நிமிடம் கிடைக்குமா என்று கேட்டு மேடை ஏறியவர் நகைச்சுவையை மையப்படுத்தி ஒரு பாட்டு பாடியதுடன் கையோடு கொண்டுவந்திருந்த புல்லாங்குழலை எடுத்து அருமையாக வாசித்துக்காட்டி அனைவரது கைதட்டலையும் பெற்றார்.
பாடகர் சீர்காழி கோவிந்தராஜனை மிகவும் பிடிக்கும் ஆகவே அவர் பாடிய பாடல்களை முடிந்த வரை அவரைப் போலவே பாடிவருகிறேன் இது என் சந்தோஷத்திற்காக மட்டுமல்ல என்னை அழைப்பவர்களின் சந்தோஷத்திற்காகவும் பாடுவது உண்டு.
தெருவில் கொட்டாங்குச்சி வயலின் விற்பவர் அழகாக வாசித்துக்கொண்டு செல்வார் சிறு வயதில் அந்த கொட்டாங்குச்சி வயலினை காசு கொடுத்து வாஙகிவிட்டாலே போதும் அவரைப் போலவே வாசிக்கலாம் என எண்ணி வாங்கிவிட்டு பிறகு வாசிக்கத் தெரியாமல் முழிப்போம் இல்லையா அது போலவே புல்லாங்குழல் வாசிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வாங்கிவிட்டேன் ஆனால் வாசிக்கும் போது காத்துதான் வந்ததே தவிர சத்தம் வரவில்லை பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டு வாசிக்க ஆரம்பித்தேன் இருப்பதிலேயே எளிமையான வாத்தியம் ஆனால் வாசிக்க சிரமமான வாத்தியம் புல்லாங்குழல்தான் நல்ல மூச்சு பயிற்சி வேண்டும் ஆனாலும் கற்றுக் கொண்டு வாசித்து வருகிறேன்.
புல்லாங்குழல் வாசிக்க வாயிலிருந்து காற்றை வெளியே விடவேண்டும் ‛மவுத்ஆர்கன்' இசைக்கருவியை வாசிக்க காற்றை வெளியில் இருந்து உள்ளே இழுக்க வேண்டும் இழுத்துதான் பார்ப்போமே என அதிலும் முயற்சி செய்தேன் பயிற்சி செய்தேன் இப்போது கொஞ்சம் மவுத்ஆர்கன் வாசிக்கவும் தெரியும்.
அந்தக்கால கட்டத்தில் யார் எப்படி பாடுவார்கள் என்று அவர்களைப் போலவே பாடிக்காட்டினார்.
முடிந்தவரை சந்தோஷமாக இருக்கணும் மற்றவர்களையும் சந்தோஷமாக வச்சுக்கணும் என்ற நல்ல குணம் கொண்ட பத்மநாதனை வாழ்த்துவோம் அவரது எண்:9444200293.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement