Advertisement

உன்னதமான உழவாரப்பணி

Share

உழவாரப்பணி என்பது கோவில்களை சுத்தம் செய்யும் உன்னதமான பணியாகும், இதை இந்த அளவிற்கு மேல் சிறப்பாக செய்ய முடியுமா? என்பதை பார்த்தவர்கள் வியக்கும் வகையில் ‛இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தினர்' கடந்த வாரம் நிகழ்த்தினர்.

இருநுாறுக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் மன்ற நிறுவனர் எஸ்.கணேசன் தலைமையில் குன்றத்துார் கந்தாழிஸ்வரர் கோயிலில் ஒன்று கூடினர்.திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க ஈசனை சுமந்தபடியும் திருமறைகள் பாடியபடியும் குன்றத்துார் வீதிகளை வலம்வந்தனர்.


அப்படி வலம்வரும் போது பிளாஸ்டிக்கை ஒழிப்பீர் துணிப்பைகளை பயன்படுத்துவீர் என்று சொல்லி பொதுமக்களுக்கு துணிப்பைகளை வழங்கினர்.

பின்னர் குன்றத்துார் முருகன் கோயிலின் பின்புறம் குவிந்துகிடந்த பிளாஸ்டிக் உள்ளீட்ட குப்பைகளை சுத்தம் செய்தனர்.அதே போல நாகேசுவரர் கோயில் தெப்பத்தில் மண்டிக்கிடந்த செடி கொடிகளை அகற்றினர் மேலும் அசராமல் பாலவராயன் குளக்கரையில் இருந்த கருவேல மரங்களை அகற்றினர் அதன்பின் முத்தாய்ப்பாக மரக்கன்றுகளை நட்டனர்.



நாடும் வீடும் மக்களும் நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக எவ்வித எதிர்பார்ப்பும் இ்ல்லாமல் இவர்கள் இப்படி செயல்படுவது 216 வது முறை என்று கேள்விப்பட்ட போது அவர்கள் மீதான மதிப்பு மேலும் அதிகரித்தது.இவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பினாலும் சரி இவர்களுக்கு உதவ நினைத்தாலும் சரி தொடர்புகொள்ள வேண்டிய எண்:9840123866.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Rajesh - Chennai,இந்தியா

    வாழ்க, வாழ்க, வாழ்க......

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement