Advertisement

சூடேற்றும் சுரங்க ரயில் நிலையங்கள்!

லண்டனின் பிரசித்தி பெற்ற சுரங்க ரயில் நிலையங்கள், ஏராளமான பொருட்செலவில் வெப்பமூட்டப்படுகின்றன. இந்த வெப்பத்தின் கணிசமான பகுதி, காற்றுப் போக்கி குழாய்கள் வழியே உடனுக்குடன் வெளியேற்றப்படுகின்றன.இதை ஏன் மறுபடியும் பயன்படுத்தக் கூடாது?

இதைத் தான், லண்டன் மாநகர நிர்வாக அமைப்புகள் வெற்றிகரமாக செய்திருக்கின்றன. லண்டனின் இஸ்லிங்டன் பகுதியில், சுரங்க ரயில் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் வெப்பத்தை, வெப்ப உந்து இயந்திரங்கள் மூலம் பிடித்து கடத்தி, அப்பகுதியிலுள்ள, 700 வீடுகளுக்கு கதகதப்பை வழங்குகிறது, லண்டன் நிர்வாகம்.

இதில் அதிக செலவு கிடையாது என்பதோடு, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாய்ப்பும் இல்லை. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் இந்த திட்டம் வெற்றி பெற்றதால், தற்போது மேலும், 450 வீடுகளுக்கு வெப்பம் வழங்க,தற்போது வேலைகள் நடந்து வருகின்றன.

குளிர்காலத்தில் இப்படி வெப்பத்தை கடத்துவது போலவே, கோடையில், இஸ்லிங்டன் பகுதியிலுள்ள சுரங்க ரயில் நிலையங்களுக்கு, வெளியிலிருந்து குளிரூட்டப்பட்ட காற்றை வழங்குகிறது சுரங்க ரயில் நிர்வாகம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement