Advertisement

மோடியின் பரிசு பொருட்கள் ஏலம்...

Share



கங்கை நதி துாய்மை திட்டத்திற்காக தனக்கு வந்த பரிசு பொருட்களை பிரதமர் மோடி ஏல விற்பனைக்கு வழங்கியுள்ளார்.

பிரதமர் மோடி தனது பயணங்களில்,சந்திப்புகளில்,விழாக்களி்ல் ஏாராளமான பரிசு பொருட்களை பெற்றுள்ளார்

இந்த பரிசு பொருட்கள் அனைத்தும் கங்கை நதி துாய்மை திட்டத்திற்காக திரட்டப்படும் நிதிக்கு பயன்படட்டும் என்று கொடுத்துவிட்டார்.

மைசூரு தலைப்பாகை,கன்றுக்கு பால் கொடுக்கும் பசு,விதம் விதமான மாநில கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கத்திகள்,வீரவாள்,போட்டோ ஸ்டாண்டு என்று நுாற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் ஏலம் விடப்படுகிறது.

www.pmmementos.gov.in என்ற இணையதளத்தில் பொதுமக்கள் பரிசு பொருட்களை நேரில் பார்த்து தங்களுக்கு விருப்பமான பரிசு பொருட்களை ஏலத்தில் கேட்கலாம்.

கடந்த 14ம் தேதி துவங்கியுள்ள இ்ந்த ஆன்லைன் ஏலம் வருகின்ற அக்டோபர் மாதம் 3 ந்தேதி வரை நடைபெறுகிறது.இருநுாறு ரூபாய் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை அடிப்படை விலையாக வைக்கப்பட்டுள்ளது.

இது பிரதமருக்கான பரிசு என்பதுடன் கங்கை நதி துாய்மை திட்டத்திற்கு பயன்படுகிறது என்பதால் பல மடங்கு அதிக விலைக்கு ஏலத்தில் எடுத்துவருகின்றனர்.

ஐநுாறு ரூபாய் மதிப்புள்ள போட்டோ ஸ்டாண்டு ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்கப்பட்டு உள்ளது,கன்றுக்கு பால் கொடுக்கும் பசுவின் சிலை 51 லட்ச ரூபாய்க்கு கேட்கப்பட்டு உள்ளது இது போன்றே மற்ற பரிசு பொருட்களின் விலைகளும் ஏலம் கேட்கப்பட்டு வருகிறது.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement