Advertisement

'டவுட்' தனபாலு

ம.தி.மு.க, பொதுச் செயலர், வைகோ: தமிழகத்தில், 'கட்-அவுட்' வைக்கக் கூடாது என அறிவித்து, பிரகடனமும் செய்து, செயல்படுத்திய ஒரே கட்சி, எங்களின், ம.தி.மு.க., தான்!


டவுட் தனபாலு: அப்படியே, 'கட் - அவுட்' பேனர்களை வைக்கும் கட்சியினர் மீது அதிரடி நடவடிக்கைகளை எடுங்கள்' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, கட் - அவுட்டுகளை நீக்க முயன்ற அரசு அதிகாரியை முதலில் தாக்கியதும் எங்கள் கட்சி தான்...'ன்னு சொல்லுங்க. நீங்க சரியாகத் தான் இருக்கீங்க; கட்சியினர் சரியில்லையோன்னு, எனக்கு, 'டவுட்!'



தி.மு.க., தலைவர், ஸ்டாலின்: தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. அதில், மத்திய அமைச்சர், அமித் ஷாவின், ஹிந்தி திணிப்புக் கருத்துகளை கண்டித்து, வரும், ௨௦ல் மாவட்ட தலைநகரங்களில், மாபெரும் போராட்ட, கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என, முடிவு செய்துள்ளோம்.



டவுட் தனபாலு: உங்களுக்கு எப்படியாவது, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, ஏதாவது ஒரு காரணம் கிடைத்து விடுகிறது. அதன்படி, போராட்டங்கள் நடத்தி விடுகிறீர்கள். பெரிய கட்சி அல்லவா... தொண்டர்களை சோர்ந்து இருக்க விடாது, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறீர்கள், சரி தான். இந்த பிரச்னை குறித்து, கடந்த நான்கைந்து நாட்களாக, நீங்கள், தமிழக கட்சித் தலைவர்கள் பலர், கடும் கண்டனம் தெரிவித்தும், அமித் ஷா, பதில் ஏதுவுமே கூறாத நிலையில், நீங்கள் நடத்த உள்ள போராட்டம், 'வேஸ்ட்' தானா என்பது தான், என், 'டவுட்!'


பத்திரிகை செய்தி: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், தமிழகத்தில் தயாரிக்கப்படும், மின் வாகனங்களுக்கு, முதல் மூன்று ஆண்டுகளுக்கு, ௧௦௦ சதவீத, மோட்டார் வாகன வரி விலக்கு அளிக்கப்படும்; மின் வாகன உற்பத்தி தொழில் பூங்காக்கள் உருவாக்கப்படும்.



டவுட் தனபாலு: நாடு முழுவதும், ஆட்டோமொபைல் தொழில் நலிவடைய, மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்ற, இது போன்ற அறிவிப்பு தான் காரணம்ன்னு சொல்றாங்க... இந்த நேரத்தில, நீங்க வேற, மின் வாகன கொள்கையை வெளியிட்டுள்ளீங்க. இதனால், பெட்ரோல், டீசல் ஆட்டோமொபைல் தொழில் முடங்கிடுமேன்னு, நீங்க கவலைப்படலையாங்கிறது தான், இப்போதைய, 'டவுட்!'

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement