Advertisement

காற்றிலிருந்து உணவு!

மனிதன் வெறும் காற்றை சுவாசித்து உயிர் வாழ முடியாது. உணவும் வேண்டும். அந்த உணவையும் காற்றிலிருந்தே தயாரிக்க முடிந்தால்? முடிந்திருக்கிறது. பின்லாந்தை சேர்ந்த, 'சோலார் புட்ஸ்', காற்றை மாசுபடுத்தும் கரியமில வாயுவை சூரிய மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டு, 'சோலெய்ன்' என்ற புதுமையான புரத மாவை உற்பத்தி செய்யத் துவங்கியுள்ளது.

அமெரிக்க விண்வெளி அமைப்பான 'நாசா'வின் தொழில்நுட்பத்தை பின்பற்றி இந்த சாதனையை செய்திருக்கிறது சோலார் புட்ஸ்.வழக்கமான தானிய மாவுகளில் இருக்கும் அதே சுவையும், புரதம், கார்போ ஹைட்ரேட் மற்றும் சிறிது கொழுப்பு ஆகியவை சோலார் புட்ஸ், காற்று மாசிலிருந்து தயாரிக்கும் சோலெய்ன் புரத்ததிலும் இருக்கிறது.

ஒரு கிலோ சோலெய்ன் தயாரிக்க எரிபொருள் செலவு குறைவு. ஒரு கிலோ சோயாவை உற்பத்தி செய்ய 2,500 லிட்டர் தண்ணீர் தேவை. ஆனால், சோலெய்னுக்கு வெறும், 10 லிட்டர் தண்ணீரே போதும். பருவநிலை மாற்றத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், சோலெய்ன் புரத மாவை விற்பனை செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Ram - Dublin,அயர்லாந்து

    நம் நாட்டு விவசாயமுறை தான் மிகச்சசிறந்தது.- நமது யோகீஸ்/ யோகிகள் வெறும் காற்றை சுவாசித்து நிஷ்டைல் இருந்துள்ளனர்.

  • abdul rajak - trichy,இந்தியா

    கண்டம் விட்டு கண்டம் பறக்கும் பறவைகள் இதே போல் தான் காற்றிலிருந்து உணவை தண்ணீரை எடுத்து கொள்கின்றன .பெரிய அதிசயம் ஒன்றுமில்லை .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement