LOGIN
dinamalar telegram
Advertisement

கதக்களி நாட்டிய திருவிழா

Share

சென்னை திருவான்மியூர் கலாச்சேத்ரா நடனபள்ளியில் கதக்களி நாட்டிய திருவிழா நடந்து வருகிறது.
கதக்களி

Border Collie
Border Collie
Border Collie
Border Collie
Border Collie
Border Collie
Border Collie
Border Collie
Border Collie
இது கேரள மாநிலத்தின் பாரம்பரிய நடன வடிவமாகும்.

கதக்களி நடனம், கேரள மக்களின் பண்பாட்டினைத் தெளிவாக எடுத்துக் காட்டும் அற்புதமான தெய்வீகக்கலை. இது பல பாத்திரங்களைக்கொண்ட ஒரு நாட்டிய நாடகமாக ஆடப்பட்டு வருகிறது . இராமாயணம், மகாபாரதம் போன்ற சமயம் சார்ந்த பழங்கதைகள் இந்த நடனத்துக்குக் கருப்பொருளாக அமைகின்றன.

கதக்களி என்றால் கதையை அடித்தளமாகக் கொண்ட ஆடல் என்று பொருள். இந்த நாட்டிய நாடகம், பழைய நாடக மேடைச் சம்பிரதாயங்களிலிருந்தும், தேவதைகளை வழிபடும் ஆட்டங்களிலிருந்தும் தோன்றியதாகக் கருதப்படுகிறது.

கதகளியின் விஷேச அம்சங்களான, பேச்சு இல்லாத அபிநயம்,
முகபாவமும், கையசைவுகளும் இந்த நடனத்தின் முக்கியமான அம்சங்களாகும். ஒப்பனையும், உடையலங்காரமும் இதனை ஒரு தனித்துவமான நடன வடிவமாக்குகின்றன.
முதல் நாளான்று இந்த நடனத்திற்காக பத்மஸ்ரீ விருது பெற்றவரான கலா மண்டலம் கோபி குழுவினரின் கதக்களி நடைபெற்றது.
நாட்டிய அரங்கம்,ஒளி ஒலி அமைப்பு அனைத்தும் பிரமாதம்.இங்கு நடைபெறும் நடனத்தைப் பார்க்க போவதற்கு சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன.செருப்பு போட்டு அரங்கத்திற்குள் நுழையக்கூடது.கேமிரா மற்றும் மொபைல் போனில் படம் எடுக்கக்கூடாது.அரங்கினுள் நுழைந்ததும் மொபைல் போனை ஆப் செய்துவிட வேண்டும்.கதக்களி நடனத்தை ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக ஆனந்தமாக ஆழமாக ரசிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் இங்கு செல்லலாம்.
-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement