Advertisement

25 வருடங்கள் 3 ஆயிரம் விநாயகர் சிலைகள்

Share

கடந்த 25 வருடங்களில் மூவாயிரத்திற்கும் அதிகமான விநாயகர் சிலைகளை சேகரித்திருக்கிறார் சென்னை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி, அவர் பேசுகையில், எந்த வித எதிர்பார்ப்பும் இ்ல்லாமல் விநாயகரிடம் அன்பு செலுத்தி அவரிடம் சரணாகதி அடைந்துவிட்டால் அவர் நமக்கு பெருமை சேரும் விதத்தில் அருமையாக பார்த்துக் கொள்வார்' என்று நெஞ்சம் நெகிழ விவரித்தார்.
இவரது விநாயகர் கலெக் ஷன்கள் வியக்கவைக்கிறது, சென்னை திநகரில் உள்ள இவரது அலுவலக அறைகளில் இரண்டு அறைகள் முழுவதிலும் விநாயகர் நிரம்பி வழிகிறார், இவரிடம் உள்ள மூவாயிரம் சிலைகளில் உள்ள விசேஷம் ஒன்றைப் போல ஒன்று இல்லை அந்த அளவிற்கு ஒன்றுக்கு ஒன்று வித்தியாசமாக உள்ளது.


இது போக கிரிக்கெட் விளையாடும் விநாயகர்,கட்டிலில் ஹாயாக படுத்திருக்கும் விநாயகர்,வாத்திய விநாயகர்,ஸ்கூட்டரில் தனது எலியாருடன் விரையும் விநாயகர்,யோகாசனம் செய்யும் விநாயகர் என்று பல விதங்களில் விநாயகர் ஆச்சரியப்படுத்துகிறார்.
ஆரம்பத்தில் எந்த ஊருக்கு சென்றாலும் அங்குள்ள விநாயகர் சிலை ஒன்றை வாங்கிவிடுவேன் இப்போது இணைய தள வசதி இருப்பதால் எங்கெல்லாம் வித்தியாசமான விநாயகர் இருக்கிறார் என்று தேடிபிடித்து தருவிக்க முடிகிறது. இப்படி வாங்கிய விநாயகர்கள் மற்றும் என்னைப்பார்க்கவரும் நண்பர்கள் தந்த விநாயகர்கள் என்று என்னிடம் இப்போது மூவாயிரத்திற்கும் அதிகமான விநாயகர்கள் சேர்ந்துவிட்டனர் இது எனக்கு ஆனந்தத்தை தரும் விஷயமாகும்.

விநாயகர் எனக்கு மட்டுமல்ல யாராக இருந்தாலும் மகிழ்ச்சியை தரும் கடவுள் அவரை நாம் எப்படி அணுகுகிறோமோ அப்படியே இருந்து நம்மை ஆசீர்வாதி்ப்பார் அவரை நெருங்குவதும் வணங்குவதும் எளிது மிக இயல்பான அன்புடன் அவரை அணுகி னால் அவர் அதைவிட இயல்பாக உங்களை அணுகி உங்களிடம் அன்பு செலுத்தி அருள்தருவார்.
அவர் ஒரு அன்பின் சின்னம் அவரை வணங்க வணங்க அந்த அன்பு உங்கள் குடும்பத்தி்ல் வியாபாரத்தில் உறவில் நட்பில் எதிரொலித்து உங்கள் வாழ்க்கை அன்பு மயமாகிவிடும் சக்தி பெருகிடும் இது என் அனுபவம் உங்கள் அனுபவமாகவும் இருக்கட்டும் என்றார்.



-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

    இங்கு குரோம்பேட்டையில் ஸ்ரீ கணேஷ்ராம் அவர்கள் 9000 விநாயகர்களை பக்தர்களின் பார்வைக்காக 10 நாட்கள் தொடர்ச்சியாக கண்காட்சி வைக்கிறார். அனைவருக்கும் பாராட்டுகள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement