Load Image
Advertisement

அறிவியல் ஆயிரம்: முதல் டைனோசர் முட்டை

ஆசியாவின் பெரிய பாலைவனம் 'கோபி பாலைவனம்'. இது சீனாவின் வடக்கு பகுதி முதல் மங்கோலியாவின் தெற்கு பகுதி வரை பரவி உள்ளது. இதன் பெரும்பாலான பகுதி மணல் பாங்காக இல்லாமல், கற்பாங்காகவே உள்ளது. பரப்பளவு 12.95 லட்சம் சதுர கி.மீ. நீளம் 1,500 கி.மீ. அகலம் 800 கி.மீ. கடல் மட்டத்தில் இருந்து 2,990 - 4,990 அடி வரையிலான உயரத்தில் அமைந்துள்ளது. இதன் சராசரி ஆண்டு மழைப்பொழிவு 194 மி.மீ. இங்குதான் முதல் டைனோசர் முட்டை கண்டுபிடிக்கப்பட்டது.

தகவல் சுரங்கம்: உயரமான நன்னீர் ஏரி



உலகின் உயரமான இடத்தில் உள்ள நன்னீர் ஏரி என மானசரோவர் ஏரி அழைக்கப்படுகிறது. இது சீனா கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் அமைந்து உள்ளது. கைலாஷ் மலைத்தொடர் மூலம் இந்த ஏரி உருவானது. இது இந்து, புத்தம் மற்றும் ஜெயின் சமூகத்தினருக்கு ஆன்மிக இடமாக திகழ்கிறது. இதன் நீர்பிடிப்பு பரப்பளவு 410 சதுர கி.மீ அதிகபட்ச ஆழம் 300 அடி. கடல் மட்டத்தில் இருந்து 15,060 அடி உயரத்தில் உள்ளது. குளிர்காலத்தில் இந்த ஏரி நீர் முழுவதும் உறைந்து பனிக் கட்டியாகி விடும்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement