Advertisement

வடபழநி கணபதி வந்தாராம்,

Share

வடபழநி கணபதி வந்தாராம்,
மனையில் இன்றே பொன்னாளாம்



விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வடபழநி ஆண்டவர் கோவிலின் சார்பில் சுற்றுப்பக்கம் உள்ள ஏழை எளியவர்களின் குடும்பத்திற்கு இலவசமாக களிமண் சிலையும், எருக்கம்பூ மாலையும், அருகம்புல்லும், பூஜை செய்யும் முறைபற்றிய குறிப்புகளும் வழங்கப்படுகிறது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேச ஒற்றுமைக்கான விழாவாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ளவர்கள் எல்லா வேலையையும் போட்டுவி்ட்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதில் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர் இது போல மற்ற மாநிலங்களிலும் இப்போது விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதில் ஆர்வம் எழுந்து வருகிறது.

இந்த ஆர்வத்திற்கு ஊக்கம் தரும் வகையிலும் ஆன்மீகத்தை வளர்க்கும் விதத்திலும் சென்னை வடபழநி ஆண்டவர் கோயில் நிர்வாகத்தின் சார்பில் சுற்றுப்பக்கம் உள்ள ஏழை எளிய குடும்பத்தினர்களுக்கு விநாயகர் சிலையும் மற்றும் பூஜை பொருட்களையும் வழங்குகின்றனர்.
ஒன்பது நாட்கள் இந்த விநாயகரை வீட்டில் வைத்து பூஜை செய்த பிறகு ஒரே இடத்தில் வைத்து கரைப்பதற்கும் (விஜர்சனம்) ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு 200 அடுத்த ஆண்டு 1000 சிலைகள் என்று ஆண்டுக்கு ஆண்டு
விநாயகர் சிலைகள் வழங்குவது அதிகரிக்கப்படும் என்றும் கோவில் நிர்வாகத்தினர் குறி்ப்பிட்டனர்.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in







Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement