Advertisement

'டவுட்' தனபாலு

தி.மு.க., தலைவர், ஸ்டாலின்: சி.பி.ஐ., அதிகாரிகள், சுவர் ஏறி குதித்து, முன்னாள் அமைச்சர், சிதம்பரத்தை கைது செய்ததை, நாட்டிற்கு அவமானமாக கருதுகிறேன்; அது, கண்டிக்கத்தக்கது.

டவுட் தனபாலு: இந்த அவமானம், அவரா தேடிக்கிட்டது தானே... சி.பி.ஐ., அதிகாரிகளை நெருங்க விடாமல், வீட்டுக்குள் எதற்கு ஒளியணும்; தைரியமாக முன் வந்து, விசாரணைக்கு ஒத்துழைத்திருந்தால், அவர்கள் எதற்கு, சுவர் ஏறி குதித்து உள்ளே போக போறாங்க... இப்படி யோசிக்கவே மாட்டீங்களா... இதுல, நாட்டுக்கு எங்கிருந்து அவமானம் வந்தது என்பது தான், மக்களின், 'டவுட்!'


பால்வளத்துறை அமைச்சர், ராஜேந்திர பாலாஜி: தி.மு.க., தயவில், மத்திய அமைச்சராகி, கனிமொழி வீட்டில், சி.பி.ஐ., 'ரெய்டு' நடத்தியவர் சிதம்பரம். சிறையை கண்டு பயப்படும் இவருக்கு, மற்றவர்களை பழிவாங்கும் போது மட்டும் இனித்ததா?


டவுட் தனபாலு: சிதம்பரம் கைதுக்கும், தமிழக அரசுக்கும், எந்த சம்பந்தமும் இல்லாதபோது, இதை பற்றி நீங்க எதற்குங்க கருத்து சொல்றீங்க... கனிமொழி பழி வாங்கப்பட்டார் என்றால், அதை, அன்றைய தினமே எதிர்த்து குரல் கொடுத்தீங்களா... இன்றாவது, கனிமொழியின் நேர்மையை ஒப்புக் கொள்றீங்களா... வாயை கொடுத்து எதற்குங்க வம்புல சிக்குறீங்க என்பது தான், என்னோட, 'டவுட்!'


கூட்டுறவு துறை அமைச்சர், ராஜு: தமிழக பால்வளத்துறை லாபத்தில் இயங்குவதாக, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொன்ன கருத்தும் சரி தான்; நஷ்டத்தில் இயங்குவதாக சொன்ன, முதல்வர், இ.பி.எஸ்.,சின் கருத்தும் சரி தான்.


டவுட் தனபாலு: இப்படி எல்லாம் விளக்கம் கொடுக்க, உங்களால மட்டும் தான் முடியும்... எங்கோ சில பால்வள சங்கங்கள் நஷ்டத்தில் இயங்குவதை, முதல்வர் குறிப்பிட்டார்னு, சப்பைக்கட்டு கட்டுறீங்க... மாநிலத்தில், எங்கோ சில இடங்களில் நடக்கும் நிகழ்வுகளை வைத்து, ஒட்டுமொத்தமாக, அ.தி.மு.க., அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்தால் ஏற்பீங்களா... அதற்கு மட்டும் எதற்கு எதிர்ப்பு தெரிவிக்குறீங்க என்பது தான், மக்களின், 'டவுட்!'

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    முன்னே பார்த்தால் இவர் குதிரை, பின்னே பார்த்தால் அவர் குதிரை என்பதுபோல் அறிக்கை விட இவர் ஒருவரால்தான் முடியும். உடம்பில் கை சூம்பியிருந்தால் என்ன , கால் இரண்டு பங்கு இருக்கே என்றால் அது வளர்ச்சியில்லை, வீக்கம்

  • theruvasagan -

    அடிப்படையிலேயே தீம்கா காரனுகளுக்கு நேர்மை வாய்மை தூய்மை கட்டுப்பாடு கண்ணியம் தேசபக்தி இறைசிந்தனை போன்றவைகள் அவமானச்சின்னமாகத்தான் தோன்றும்.அதே சமயம் பொய் புரட்டு பித்தலாட்டம் மோசடி ஊழல் புளுகு ஒழுக்கக்கேடு அநாகரீகம் தேசவிரோதம் கடவுள் நிந்தனை போன்றவைகள் எல்லாம் கௌரவமான குணங்கள். அதல்லாம் புழுத்தறிவு பாசறை லட்சணங்கள். மாத்தவும் முடியாது. மாறவும் மாட்டார்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement