Advertisement

'டவுட்' தனபாலு

கரூர், காங்., - - எம்.பி., ஜோதிமணி: திட்டங்கள் எப்போதும், ஒரு துறையின் கீழ் தான் செயல்படுத்தப்படும். ஆனால், ஜல்சக்தி அபியான் திட்டம், வேளாண், கல்வி, வனம் ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதால், நல்ல பலனை தரும்.



டவுட் தனபாலு: மத்திய, பா.ஜ., அரசை ஆதரித்துப் பேசுவதைக் கேட்டு, சில நேரங்களில், உங்க கட்சி கூட, அமைதியா இருந்திடும்... ஆனால், உங்க கூட்டணி கட்சியான, தி.மு.க., சும்மா விடுவது, 'டவுட்' தான்... கழற்றிவிட காரணம் தேடுபவர்களுக்கு, உண்மையைப் பேசி, நீங்க பலிகடா ஆகிடாதீங்க...!


காங்., மேலிட பொறுப்பாளர், முகுல் வாஸ்னிக்: நாட்டின் பிரதமராக, ராகுலும், தமிழகத்தின் முதல்வராக, ஸ்டாலினும் அரியணை ஏறும் காலம் விரைவில் வரும்.



டவுட் தனபாலு: இதைத்தான், லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போதும் சொன்னீங்க... கடைசியில், ராகுலிடம் இருந்த தலைவர் பதவியும் போனது தான் மிச்சம்... பார்த்துங்க... 'எங்கள் தலைவரை, ராகுலோடு ஒப்பிடாதீர்கள்'னு, தி.மு.க.,வினர் கோபப்பட்டிடப் போறாங்க... அப்புறம் உங்க பகல் கனவு, அம்போ தான் என்பதில், 'டவுட்'டே வேண்டாம்...!


மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார்: 'மத்தியில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், அ.தி.மு.க., ஆட்சியை, உடனடியாக வீட்டிற்கு அனுப்புவோம்; அனைவரையும், சிறைக்கு அனுப்புவோம்' என, லோக்சபா தேர்தலின் போது, சிதம்பரம் கூறினார். இன்று அவருக்கே, அந்த நிலை ஏற்பட்டிருப்பது, பரிதாபத்துக்குரிய விஷயம்.


டவுட் தனபாலு: சிதம்பரம் விவகாரத்தை, எதைச் சொல்லி திசை திருப்பலாம்னு, ஆளாளுக்கு காரணம் தேடிக்கிட்டு இருக்காங்க... இந்த நேரத்தில், இது தேவையா... 'பழைய பகையைத் தீர்க்க, அ.தி.மு.க., அழுத்தம் கொடுத்து, மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கு'ன்னு, கதை புனைய, நீங்களே, 'நோட்ஸ்' எடுத்துக் கொடுக்கலாமா என்பது தான், மக்களின், 'டவுட்!'

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • யுவராஜ் -

    அக்கா ஜோதி மணி வாழ்க

  • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

    அரசியல்வாதிகள், மந்திரிகளாக இருக்கும் ஜெயக்குமார் போன்ற்வர்கள் எதற்கு லாயக்கானவர்கள் என்பது ஒரு புரியாத புதிர் .......... இவர் ஏன் எப்போ பாத்தாலும் பேசிக்கிட்டே இருக்கார்? ......... வேலை வெட்டி ஒண்ணும் கிடையாதா ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement