Advertisement

'அவர் பெயர்லயே முருகன் இருக்காரே!'

தமிழக சட்டசபை பொது கணக்கீட்டு குழுவின் தலைவர், தி.மு.க.,வின் துரைமுருகன் தலைமையில், மதுரையில் இரண்டு நாட்கள் ஆய்வு நடத்தியது. பின், துரைமுருகன் பேட்டி அளித்தார்.அப்போது, 'நீங்கள் நடத்திய ஆய்வுக்கு, எத்தனை மார்க் போடுவீர்கள்' என்ற கேள்விக்கு, பதிலளிக்காமல் கையை மேலே உயர்த்தியவர், 'சினிமாவில் கூறுவரே... நமக்கு மேலே ஒருத்தன் இருப்பான்' என, 'கமென்ட்' அடித்தார்.நிருபரும் விடாமல், 'உங்களுக்கு தான் கடவுள் நம்பிக்கை இல்லையே' என, கேள்வி எழுப்ப, 'நாங்க தான் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என சொல்லி இருக்கிறோமே' என சமாளித்து, பேட்டியை முடித்தார்.மூத்த நிருபர் ஒருவர், 'அவர் பெயர்லயே, முருகக் கடவுள் இருக்கிறாரே... அதெல்லாம் நல்லாவே சாமி கும்பிடுவாரு பா...' எனக் கூற, சக நிருபர்கள் சிரித்தபடியே கிளம்பினர்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா

    பேசாம நீங்களே தலைவர் ஆயிருக்கலாம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement