Advertisement

'நியூஸ் அமைச்சர் ஆக வேண்டியவர்!'

'நியூஸ் அமைச்சர் ஆக வேண்டியவர்!'


தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், விமானம் மூலம், சமீபத்தில் திருச்சி வந்தார். அங்கு, நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல், அவரே இரு விஷயங்களை சொல்லி, 'இதை செய்தியாக போட்டுக் கொள்ளுங்கள்' என்றார். ஆனாலும், அமைச்சரை விடாமல், நிருபர்கள், கேள்விகள் கேட்டனர்.அதற்கு, அமைச்சர் விஜயபாஸ்கர், 'இன்றைக்கு இரண்டு புது விஷயம் சொல்லிட்டேன். அது போதும்... அதை போடுங்க... மற்றதெல்லாம், அப்புறம் பார்த்து கொள்ளலாம்...' எனக் கூறி, சென்று விட்டார்.மூத்த நிருபர் ஒருவர், 'விட்டால், இது தான் தலைப்பு... தலைப்புக்கு கீழ் இது... இந்த பக்கத்துக்கான செய்தி இது என, எல்லாவற்றையும், அமைச்சரே சொல்லி விடுவார் போல... இவரெல்லாம், 'நியூஸ் எடிட்டர்' ஆக வேண்டியவர்' என, கிண்டலடிக்க, சக நிருபர்கள், ஆமோதித்தபடியே அங்கிருந்து நகர்ந்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement