Advertisement

விண் உலகில் சாதிக்க போகிறது இந்தியா!

விண் உலகில் சாதிக்க போகிறது இந்தியா!
இளசை கவிச்செல்வம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: பூமியில் இருந்து, ௩.௮௪ லட்சம் கி.மீ.,ல் உள்ள, நிலவை ஆய்வு செய்ய, பல நாடுகள் ராக்கெட்டுகளை அனுப்பினாலும், விண்கலத்தை தரை இறக்கி ஆய்வு நடத்தியது, அமெரிக்கா, ரஷ்யா, சீனா நாடுகள் தான்.அந்த வரிசையில், தற்போது இந்தியாவும், இஸ்ரோவில் இருந்து, விண்கலத்தை ஏவும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து, ஜூலை, ௨௨ பகல், ௨:௪௩ மணிக்கு, சந்திரயான் - ௨ விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.இதன் வாயிலாக, 'இஸ்ரோ' உலக நாடுகளிடையே கம்பீரமாக தலை நிமிர்ந்து நிற்கிறது.தனியார் மற்றும் வெளிநாடுகளுக்காக, வணிக ரீதியாக அனுப்பப்பட்ட செயற்கை கோள்கள் வாயிலாக, மூன்றாண்டுகளில் மட்டும், ௬,௨௮௯ கோடி ரூபாய் வருவாயை இந்தியாவுக்கு ஈட்டி தந்துள்ளது, இஸ்ரோ!இந்தியா சுதந்திரம் அடைந்து, ௭௫ம் ஆண்டு விழா கொண்டாடும் தருணத்தில், வரும், 2022ல், நிலவுக்கு மனிதர்களை அனுப்பி வைக்கவும், ௨௦௨௦ல் சூரியனுக்கும், ௨௦௨௩ல் வெள்ளிக்கும் விண்கலங்களை அனுப்பி வைப்பதற்கான முயற்சியில், நம் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.உள்நாட்டு தயாரிப்பான, சந்திரயான் - ௨ விண்கலத்தின் மொத்த எடை, ௩, ௮௫௦ கிலோ. இந்த திட்டத்திற்கான மொத்த தொகை, ௯௭௮ கோடி ரூபாயில், விண்கலத்துக்காக, ௬௦௩ கோடி ரூபாயும், ராக்கெட்டுக்காக, ௩௭௫ கோடி ரூபாயும் செலவாகி உள்ளது.ஆனால், மக்கள் வசிப்பதற்கு தகுந்த, வேறு கிரகம் தேடி செல்லும் கதையமைப்பு உடைய, 'இண்டர்ஸ் டெலர்' எனும், 'ஹாலிவுட்' படத்தின் பட்ஜெட், ௧,௧௩௮ கோடி ரூபாய் செலவை ஒப்பிடும் போது, சந்திரயான் - ௨க்கு செலவிடப்பட்ட தொகை, மிகவும் குறைவு.நிலவில் இருப்பது போன்ற மண், நாமக்கல் மாவட்டம், சித்தம்பூண்டி, குன்னமலை பகுதிகளில் உள்ளது. அந்த மண்ணை சேகரித்து, விஞ்ஞானிகளால் வெள்ளோட்டம் நடத்தப்பட்டது. இதில் கிடைத்துள்ள வெற்றி, நிலவிலும் கைகூட வேண்டும் என்பதே விஞ்ஞானிகள் உள்ளிட்ட அனைவரின் எதிர்பார்ப்பு. வரும், செப்டம்பர் முதல் வாரத்தில், இதற்கான விடை கிடைக்கும்.இதுவரை, வேறு எந்த நாடாலும், தொட முடியாத நிலவின், தென் துருவத்தில் தரையிறக்க தீர்மானித்து உள்ளதால், சந்திரயான் - ௨வின் செயல்பாட்டை, உலக நாடுகள் ஆர்வமாக கவனித்து வருகின்றன. இதில், கிடைக்கும் வெற்றி, இந்தியாவின் புகழை உலக அளவில் எதிரொலிக்கச் செய்யும்!

குறுக்கு வழியில்அரசு பணியைபெறக் கூடாது!

எஸ்.ராமையா, திண்டுக்கல்லிலிருந்து எழுதுகிறார்: அரசு பள்ளிகளில், ஆசிரியர் பணி கேட்டு, 8.20 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர். இடைநிலை ஆசிரியர் வேலை கேட்டு, 1.90 லட்சம் பேரும், பட்டதாரி ஆசிரியர் பணி கேட்டு, 3.62 லட்சம் பேரும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி கேட்டு, ௨.68 லட்சம் பேரும் காத்திருக்கின்றனர்.அரசு பள்ளிகளில், பல ஆயிரம் எண்ணிக்கையில், உபரி ஆசிரியர்கள் இருக்க, புதிய பணியிடம் என்பது, கானல் நீராய் தான் உள்ளது. ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், பி.எட்., கல்லுாரிகளில், மாணவர்கள் சேர்க்கையை பெருமளவு குறைத்து விட்டன. பல நுாறு நிறுவனங்கள் மூடும் நிலையை நோக்கிப் பயணிக்கின்றன.தமிழகத்தில், வேலை வாய்ப்பு அலுவலகங்களில், வேலை கேட்டு பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை, ௭௯ லட்சம். மருத்துவ படிப்பான, எம்.பி.பி.எஸ்., முடித்து, அரசு பணி கேட்டு, காத்திருப்போரின் எண்ணிக்கையும் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது.முறையாக பதிவு செய்யாமல் விட்டு விட்டோர், பதிவை புதுப்பிக்காதோர், இந்த எண்ணிக்கைக்குள் வர மாட்டார்கள்.பி.ஏ., பட்ட படிப்பு படித்தவர்கள், 4 லட்சம் பேரும், பி.எஸ்.சி., முடித்தோர், 5.83 லட்சம் பேரும், அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். பொறியியல் பட்டதாரிகள் மட்டும், ௨.29 லட்சம் பேர் உள்ளனர்.அரசு மருத்துவமனைகளில் வேலைவாய்ப்பு இல்லாததால், தனியார் மருத்துவமனைகளில், குறைவான மாத ஊதியத்தில், டாக்டர்கள் வேலை பார்க்கின்றனர். வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 2,302 மருத்துவ பட்டதாரிகள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். அவுட்சோர்ஸ் முறையில், காலி பணியிடங்களை நிரப்புவதில் ஆர்வம் காட்டுகிறது, அரசு.அதிக அளவில், முழு சம்பளம் கொடுப்பதற்கு பதிலாக, குறைவான தொகுப்பூதியத்தில் ஆட்களை நியமிக்கவே, அரசு விரும்புகிறது.போட்டி நிறைந்த உலகில், எதுவும் எளிதில் கிடைத்து விடாது. போராடி தான் பெற வேண்டும். குறுக்கு வழியில், அரசு பணியை பெற்று விடலாம் என்ற மனநிலையை மாற்றி, தன்னம்பிக்கையுடன் பயணிக்க வேண்டும்!

இரு மொழிகொள்கைஏற்புடையதா?

வி.விஜயராகவ், கூடுதல் ஜெனரல் மேனேஜர், பி.எச்.எல்., (பணி நிறைவு) பெங்களூரிலிருந்து எழுதுகிறார்: இன்று, உலகின் சிறந்த பல்கலை கழகங்களின் முதல், ௨௦௦ இடங்களில், இந்தியாவின், எந்த பல்கலைகளும் இடம் பெறவில்லை. நாட்டில் பட்டம் பெற்ற இளைஞர்களில், 90 சதவீதத்தினர், வேலைகள் மேற்கொள்ள தகுதியற்றவர் என, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலை தெரிந்திருந்தும், கல்வி சீர்திருத்தத்திற்கு என்ன அவசரம் என, கேட்போரை என்ன சொல்வது?ஒரு மாநிலத்தில் இருந்து, வேறு மாநிலம் சென்று, வேலை பார்க்க வேண்டிய சூழலில், இரு மொழிகள் தவிர, நாட்டில் அதிகமாகப் பேசப்படும், மற்றொரு மொழியை கற்று கொண்டால், எளிதாக அங்கு சென்று வாழ முடியும்.தமிழகத்தில், தாய்மொழியும், இணைப்பு மொழியாக ஆங்கிலமும், அரசு பள்ளிகளில் கற்று தரப்படுகிறது. இது, தமிழக அரசு பின்பற்றும் இருமொழி கொள்கையாக கருதப்படுகிறது.நாடு முழுவதும், சமமான தரமுடைய கல்வி அளிக்க எடுக்கப்பட்ட முயற்சி தான், புதிய கல்வி கொள்கை. இது, அவசர அவசரமாக அமல்படுத்தப்படவில்லை. பல ஆண்டுகள், கல்வி துறையில் அனுபவம் பெற்ற, பல அறிஞர்கள் இணைந்து உருவாக்கப்பட்டது.நாடு முழுவதும் உள்ள எந்த பல்கலையிலும், ஒரு மாநில மக்கள் தேர்ந்தெடுக்கப்பட, பொது நுழைவு தேர்வு அவசியம். இந்த பொது கொள்கையை, எல்லா மாநிலங்களும் ஏற்று, மக்களை சென்றடைய, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம்.அரசியல்வாதிகள், இதில் அரசியலை புகுத்தாமல், ஆய்ந்து, ஒரு நல்ல திட்டத்தைச் செயல்படுத்த வேண்டிய தருணம் இது. சிறு சிறு குறைகளை சுட்டிக் காட்டி திட்டத்தையே எதிர்ப்பதை விட, புதிய திட்டத்திற்கு வழிவிட்டு, அதை அமல்படுத்தி, குறைகளை கண்டு திருத்த முன் வர வேண்டும்.குறைந்த செலவில் சிறந்த கல்வி பெறும், நவோதயா பள்ளி திட்டத்தை, அரசியல் காரணங்களுக்கு எதிர்ப்பது, தமிழக அரசியல்வாதிகளே!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement