Advertisement

அமித் ஷா அழைப்பை ஏற்பாரா ரஜினி?

Share

அமித் ஷா அழைப்பை ஏற்பாரா ரஜினி?

என்.கந்தசாமி, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பா.ஜ., தலைவர்களின் சிந்தனையும், ரஜினியின் சிந்தனையும் ஒரே மாதிரி இருக்கின்றன. அவர், பா.ஜ.,வில், ஐக்கியமாவது மட்டுமே, புத்திசாலித்தனமாக முடிவாக இருக்கும்.அவரின் ரசிகர்கள் பலமும், பா.ஜ., தொண்டர்கள் பலமும், ஒன்று சேரும் போது ரஜினியின் ஓட்டு வங்கி கணிசமாக உயரும். இன்று, ஊழல் கறை படியாத, உத்தமராக, ரஜினி மட்டுமே தெரிகிறார். கோடிக்கணக்கில் பணம் ஏற்கனவே ரஜினியிடம் இருக்கிறது. ஊழல் செய்து, மேலும் கோடி கோடியாக சம்பாதிக்க வேண்டும் என்ற, கேவலமான எண்ணம் அவருக்கு கிடையாது.இதை அறிந்து தான், 'தமிழக பா.ஜ., தலைவர் பதவியையும், முதல்வர் பதவியையும், ரஜினிக்கு தர தயார்' என்கிறார், உள்துறை அமைச்சர், அமித் ஷா. இது, மிக அருமையான யோசனை தான்!ரஜினி புதிய கட்சி துவக்கினாலும், அவரால், எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா போல மக்களின் மனத்தில் நிலையான இடத்தை பிடித்து, ஆட்சி அமைக்க முடியாது.ரஜினி, ஒரு தடவை சொன்னால், அது, தமிழக மக்களுக்கு நுாறு தடவை சொன்னது போல மனதில் பதியும். 'என் வழி, தனி வழி' என, அவர் சொல்லி, புதுக்கட்சி ஆரம்பித்தால், விஜயகாந்த், டி.ராஜேந்தர், சரத்குமார், கமல்ஹாசன் போல உருப்படாமல் போய் விடுவார். 1967க்கு பின், தமிழகம் நாத்திக தலைவர்களிடம் சிக்கி, நாசமாகிப் போனது தான் மிச்சம்.ஸ்டாலின், கமல்ஹாசன் போன்ற நாத்திக செம்மல்களிடம், தமிழகம் சிக்கிச் சீரழியாமல் இருக்க, ஆன்மிக சிந்தனைவாதிகளின் கையில் ஆட்சி இருக்க வேண்டும்ரஜினி பேசுவது, மக்களுக்கு தெளிவாக புரிகிறது. மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் துணிச்சல், ரஜினிக்கு நிறையவே இருக்கிறது. மாநில அளவில், சிந்திக்காமல், தேசிய நீரோட்டத்தில், அவர் கலப்பதால், அவரால் தமிழகம் முன்னேற வாய்ப்புகள் அதிகம்.இந்த மண், பாழாய் போன பகுத்தறிவுவாதிகள் அவதரித்த மண் இல்லை; ஆன்மிக சிந்தனைவாதிகள் அவதரித்த மண் என்பதை, கருத்து குருடர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.தமிழகத்தை, ஆளும் உரிமை திராவிடர்களுக்கு மட்டுமே உண்டு என, தம்பட்டம் அடிப்போர், எண்ணம் ஈடேறாமல் இருக்க, ரஜினி விஸ்வரூபம் எடுக்கும் நேரம் வந்து விட்டது. இனியும் தாமதிக்காமல், அரசியலுக்கு ரஜினி வர வேண்டும்!


தமிழகம் உருப்படஇதையெல்லாம்செய்யணும்!

ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சுதந்திரம் அடைந்ததும், தமிழகத்தை, காங்கிரசும், அடுத்த, 52 ஆண்டுகளாக திராவிட கட்சிகளும் ஆண்டு வருகின்றன. இன்று, ஊழல் ஆகட்டும்; சாலை விபத்துக்கள் ஆகட்டும், முதலிடம் வகிப்பது, தமிழகம் தான்.அன்று, காமராஜர் ஆண்ட போது, தன்னலங்கருதாத, தனி பெருந்தலைவராக திகழ்ந்தார். முதல்வராகவும், பிரம்மசாரியாக இருந்த போது, தன் தாயையும், சகோதரியையும், பாரமாக தான் நினைத்தார்.அரசு அதிகாரிகளுக்கு, தாமதமில்லாமல் பதவி உயர்வுகளை வழங்கி கவுரவித்தார். அவர்களும் நன்றிக்கடன் பட்டவர்களாக, அவர்களின் அதிகபட்ச உழைப்பை வழங்கினர்.பின், தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகளால், அரை நுாற்றாண்டுகளாக, பெரிய வளர்ச்சி எதையும் சாதித்து, உயர்ந்து விட வில்லை. ஆனால், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் தான் கோடீஸ்வரர்களாகி விட்டனர். அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.ஐந்தாண்டுகள் எவ்வளவு தான் ஆட்டம் போட்டாலும், தேர்தல் வந்தால், ஓட்டுக்காக, வாக்காளர்களிடம் தவம் கிடக்கின்றனர், அரசியல்வாதிகள். ஆனால், இந்த நிலை அதிகாரிகளுக்கு இல்லை. ஒரு முறை, அவர்கள் பதவிக்கு வந்தால், மேலதிகாரிகளை உரிய முறையில், 'கவனித்து' கொண்டாலே போதும்.எல்லா பதவி உயர்வுகளையும் பெற்று, ஓய்வு பெறும் காலத்தில் கோடீஸ்வரர்களாகி விடை பெறுகின்றனர். இவற்றை தடுக்க வழிமுறைகள் இருக்கின்றன.* -ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை, அரசியல்வாதிகளின், அனைத்து சொத்துகளும் கணக்கிடப்பட வேண்டும். வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த சொத்துகளை அரசுடைமையாக்க வேண்டும்* -தனியார் பள்ளி, கல்லுாரிகள் அனைத்தும் அரசுைடமையாக்கப்பட வேண்டும்* அரசியல்வாதிகள் மீதான குற்ற வழக்குகளை, ஆறு மாதங்களுக்குள் விசாரித்து, தகுந்த தண்டனை வழங்க வேண்டும்* விபரீத குற்றம் இழைப்போர், ஆயுள் முழுமைக்கும், அரசியலிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும்* லஞ்சம் வாங்குவது நிரூபிக்கப்பட்டால், அதிகாரிகளை பணியிலிருந்து நீக்க வேண்டும்* -லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளே, லஞ்சம் வாங்கியது நிரூபிக்கப்பட்டால், அவர்களை நாடு கடத்த வேண்டும்.இவற்றை பின்பற்றினால், தமிழகம் உருப்படும்; இல்லையெனில், கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை தான் நடக்கும்!


ஏரிகளின் நீர்மட்ட சரிவைதடுக்கணும்!

ஜே.பிரகாஷ், பொறியாளர், சென்னையிலிருந்து எழுதுகிறார்: சென்னையில் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. குடிநீர் வழங்கும், செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஆகிய நான்கு ஏரிகளும் வறண்டு விட்டன.இந்த ஏரிகளில் பல இடங்களில், ஆழ்துளை கிணறுகள் அமைத்து, நிலத்தடி நீரை பெறலாம். ஆனால், இந்த நான்கு ஏரிகளை சுற்றிலும் பலர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து, 'கேன் வாட்டர்' விற்பனை செய்து, கொள்ளை லாபம் பார்க்கின்றனர்.குறிப்பாக, சோழவரம், புழல் ஏரிகளின் வெகு அருகில், இந்த மாதிரி குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன.இம்மாதிரி நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாலேயே, ஏரிகளின் நிலத்தடி நீரும், தேங்கியுள்ள நீரும் வெகு விரைவாக குறைந்து விடுகிறது. குடிநீர் விற்பனை செய்யும், 'கேன் வாட்டர்' கம்பெனிகள், ௨௦ லிட்டர் குடிநீருக்கு, ௫ ரூபாய் மட்டுமே செலவு செய்து, ௪௦ ரூபாய் வரை பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றன.குடிநீர் வழங்கும் ஏரிகளை சுற்றி, ௩ முதல், ௫ கி.மீ., வரை இம்மாதிரி, கேன் வாட்டர் கம்பெனிகள், ஆழ்துளை கிணறு மூலம், தண்ணீர் எடுக்க, பொதுப் பணித்துறையும், குடிநீர் வடிகால் வாரியமும் அனுமதி அளிக்கக் கூடாது.ஏற்கனவே, அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும், அவை ரத்து செய்யப்பட வேண்டும். அப்படி செய்வதன் வாயிலாக, குடிநீர் ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக சரிவதை குறைக்க முடியும்.அரசு நடவடிக்கை எடுக்குமா?

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    ரஜினி ஆன்மிக சிந்தனை உள்ளவராக இருப்பது தவிர, குடும்பத்தினர் கோடிகளில் கடன், கோர்ட் கேஸ் என ஆட்டம் போடுபவர்கள், பதவிக்கு வந்து இன்னும் ஆட்டம் போட தயாராக உள்ளனர். அவர்களை அடக்கி ஆள அவரால் இயலுமா? பா ஜவுக்கு ஒரு நட்சத்திர ஆதரவு தென்னகத்தில் வேண்டும். அதற்கு குழை அடிக்கிறார்கள்

  • Nagarajan Duraisamy - Fremont,California,யூ.எஸ்.ஏ

    மறையை கழட்டாம விட மாட்டாங்க போலிருக்குது ....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement