Advertisement

'டவுட்' தனபாலு

கூட்டுறவுத்துறை அமைச்சர், ராஜு: மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஒன்பது முறை சிந்தித்தார் என்றால், தற்போதைய முதல்வர், இ.பி.எஸ்., 16 முறை சிந்தித்து தான், எந்தவொரு விஷயத்தையும் செய்வார்.



டவுட் தனபாலு: போற்றி புகழ் பாடுவது என முடிவான பிறகு, அதுல எதுக்குங்க வேகத்தடை... 'ஜெ., எதையும் எடுத்தேன் கவிழ்தேன் என செயல்படுவார்; அதனால், அவரது முடிவுகள், தவறாக கூடிய வாய்ப்புகள் அதிகம்... ஆனால், இ.பி.எஸ்., அப்படி இல்லை... எதையும், அனைத்து விதத்திலும் தீர ஆராய்ந்தே, அறிவிப்பார்'னு, சொல்லிட வேண்டியது தானே... தட்டிக்கேட்க யார் இருக்கா என்பது தான், என்னோட, 'டவுட்!'


தமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசை: தமிழக அரசு, மத்திய அரசுக்கு கைகட்டி நிற்பதாக, ஸ்டாலின் கூறுகிறார். காங்கிரஸ் ஆட்சியில், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது, தி.மு.க., என்ன செய்து கொண்டிருந்தது.



டவுட் தனபாலு: 'அப்படியெல்லாம் எதுவுமில்லை; தமிழக அரசு சொல்லும் விஷயங்களுக்கு, மத்திய அரசும், இறங்கி நடந்து கொள்கிறது'ன்னு, உதாரணத்தோடு கூறி, வாயை அடைக்கலாம்... அதை விடுத்து, எதற்கு, பழங்கதை... காங்., ஆட்சியில், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது, எதிர்க்கட்சியாக இருந்த நீங்க, என்ன செய்து கொண்டிருந்தீங்க... இன்று வரை, அதற்கு என்ன எதிர் வினை காட்டியிருக்கீங்க என்ற, 'டவுட்'டை யாரும், கேட்டிட போறாங்க...!


காங்., மூத்த தலைவர், சத்ருகன் சின்ஹா: நான் பா.ஜ.,வில் இருந்த போது, வெளிப்படையாக பேசக் கூடியவன் என்ற பெயரை பெற்றவன். பிரதமர் நரேந்திர மோடியின், இந்தாண்டு சுதந்திர தின உரை, உண்மையில், மிகவும் தைரியமானதாகவும், சிந்தனையை துாண்டக் கூடியதாகவும் அமைந்துள்ளது.


டவுட் தனபாலு: மீண்டும் கட்சி மாற ஆயத்தமாகிட்டீங்க போல... வெளிப்படையாக பேசுபவர் என்பதை தாண்டி, இருக்குற கட்சிக்கு எதிராக பேசுபவர் என்ற பெயர் தான், உங்களுக்கு நிலைக்க போகுது... நடவடிக்கை எடுக்க, காங்., தலைமையில் யாரும் இல்லை என்பதால், இப்படி கம்பு சுத்துறீங்களோ என்ற, 'டவுட்' வருது...!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அம்மா காலத்தில் அம்மாவுக்குப் புகழ் மாலை அவர் போய் மூன்று வருஷம் ஆகப்போகிறது, இன்னும் எதற்கு அவர் நினைவு? வாழ்பவர்களுக்குத்தான் மாரடிக்க வேண்டும். முதல்வர் 32 முறை யோசித்துக்கொண்டு எட்டுபங்கு விலையேற்றுகிறார் என்று இன்னும்கூட சொல்லும் நாள் வரும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement