Advertisement

'டவுட்' தனபாலு

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த, டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால்: கடந்த சட்டசபை தேர்தலில், டில்லியில், 67 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். அடுத்து வரும் தேர்தலில், 70 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.


டவுட் தனபாலு: அந்த, 67 எம்.எல்.ஏ.,க்களில், இப்போ உங்களோடு எத்தனை பேரு இருக்காங்க... மாநகராட்சி தேர்தல், லோக்சபா தேர்தல்களில், உங்களின் செல்வாக்கு, எந்த அளவுக்கு சிதிலம் அடைந்திருக்கு என்பது அப்பட்டமாகிடுச்சே... அப்புறம், எதை வைத்து இவ்வளவு பெரிய ஆசையைச் சுமக்குறீங்க என்பதுதான், என்னோட, 'டவுட்!'


பத்திரிகை செய்தி: கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள, பா.ஜ., மூத்த தலைவர், எடியூரப்பா தலைமையில், 22 நாட்களில், மூன்று முறை அமைச்சரவை கூட்டம் நடந்துள்ளது. ஆனால், அமைச்சர்கள் யாரும் நியமிக்கப்படாததால், அவர் மட்டுமே அதில் கலந்து கொண்டுள்ளார்.


டவுட் தனபாலு:
போன வருஷம், அவசரப்பட்டு, முதல்வர் பதவியேற்று, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், ஆறே நாளில், அதை ராஜினாமா செய்தாரு... இப்போ, பெரும்பான்மையை நிரூபிச்சாச்சு... ஆனா, அமைச்சரவையை அறிவித்தால், அதிருப்தி குரல்களால், மீண்டுமொரு கலகம் வரும்னு பயப்படுறாரோ... இந்த தாமதத்துக்கு, இதைவிட வேறு என்ன காரணம் இருக்க முடியும்கறதுதான், என்னோட, 'டவுட்!'


பால்வளத்துறை அமைச்சர், ராஜேந்திர பாலாஜி: தி.மு.க., பிரிவினையை துாண்டக் கூடிய கட்சி. தீவிரவாதத்திற்கு ஆதரவான நிலைப்பாடுகளை எடுக்கிறது.

டவுட் தனபாலு: எதிர்க்கட்சிகளை அடக்க, இதைவிட அற்புதமான விஷயம் எதுவும், ஆளும்கட்சிக்கு கிடைப்பது கஷ்டம் தான்... நாட்டில், பிரிவினையைத் துாண்டி, தீவிரவாதத்தை ஆதரிக்கும், தி.மு.க., மீது நடவடிக்கை எடுக்காமல், எதற்காக இவ்வளவு காலமும் வேடிக்கை பார்க்குறீங்க என்பது தான், பெரும், 'டவுட்'டாக இருக்கு...!


Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement