Advertisement

'டவுட்' தனபாலு

துாத்துக்குடி தொகுதி, தி.மு.க., -- எம்.பி., கனிமொழி: காஷ்மீர் தலைவர்களின் குடும்பத்தினரை, வீட்டு சிறையில் வைத்திருப்பது, கடும் கண்டனத்துக்குரியது. அவர்களை விடுவித்து, அங்கு இயல்பு நிலை திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை, மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

டவுட் தனபாலு: இயல்பு நிலை திரும்புவதற்காகத் தான், அவர்களை, வீட்டுகாவலில் பாதுகாப்பாகவைத்திருக்காங்க... எரிவதை பிடிங்கினால், கொதிப்பது அடங்கும்கறது தான், உலக நியதி... உங்க குடும்பத்தினரை பொருத்தவரையில், பழமொழியை எக்குத்தப்பாகத்தான் பார்ப்பீங்களோ என்ற, 'டவுட்' வலுக்குதே...!

மக்கள் நீதி மையம் கட்சி தலைவர், கமல்: கட்சிதுவக்கிய, 14 மாதத்திலேயே, லோக்சபா தேர்தலை தைரியமாக சந்தித்து, மக்களின் பெரும் ஆதரவை பெற்றோம். அந்த ஆதரவை, மேலும் வலுப்படுத்தி, 2021ல், மக்கள் நலன் விரும்பும் நல்லாட்சி அமைக்க, உத்வேகத்துடன் பாடுபடுவது என, முடிவு செய்துள்ளேன்.



டவுட் தனபாலு: லோக்சபா தேர்தலை தைரியமாகசந்தித்தீங்க என்பது சரி தான்... ஆனா, வேலுார்தேர்தலில் அந்த தைரியம் எங்கே போச்சு என்ற, 'டவுட்' இருந்துச்சு... எதிர்பார்த்த அளவு மக்களின் ஆதரவுஇல்லாத காரணத்தால் தான், அந்தத் தேர்தலை புறக்கணித்திருக்கீங்க என்பது, இப்போது உங்களின் இந்த விளக்கத்தின் மூலம் புரியுது...!


ம.தி.மு.க., பொதுச்செயலர்,வைகோ: தமிழகத்தில் அடக்கு முறை ஆட்சி நடக்கிறது.இந்த ஆட்சி நிரந்தரம் என கருத வேண்டாம்.


டவுட் தனபாலு: 'எதை வைத்து இதை அடக்குமுறை ஆட்சின்னு சொல்றீங்க... இன்று நீங்க, அடிக்கடி நீதிமன்ற படிகளில் ஏறியிறங்கி வருவது, எந்த ஆட்சி போட்ட வழக்கின் எதிரொலி என்பது எல்லாம், மறந்து போச்சா'ன்னு, யாரும், 'டவுட்' எழுப்பிட போறாங்க...!

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    வேலூர் தேர்தலில் பங்கேற்று டெபாசிட் இழப்பது நிச்சயம் என்று தெரியும் ஆளுங்கட்சியின் அனைத்து யந்திரங்கள், பணக்கட்டுகள் ஒருபுறமும், atharkul குறையாத திமுக வின் நோட்டு விநியோகம் இரண்டுடன் போட்டியிடுவது வீண் என்ற விவேகம்தான் காரணம் நாம் தமிழரின் கதியைப் பார்த்தோமே

  • thamodaran chinnasamy - chennai,இந்தியா

    அய்யா மைக்கோ நீ ஒரு சைக்கோ. மூடிட்டு போய்க்கோ. என்னவெல்லாமோ சொல்ல வேண்டி வரும் ..... .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement