Advertisement

முற்றுகையிட்டு வேவு பார்க்கும் 'ட்ரோன்'கள்!

Share

அமெரிக்க ராணுவம், ஆளில்லாமல் பறந்து சென்று தாக்கும், 'ட்ரோன்'ன்களை அதிக அளவில் பயன்படுத்துகிறது.

இப்போது அதன் புதிய திருப்பமாக, சிறிய ட்ரோன்களை ஏராளமாக ஏவி, உளவு பார்க்க, 'ஆப்செட்' என்ற புதிய திட்டத்தை உருவாக்கி இருக்கிறது. பாலைவனம், மலைகள், காடுகள் போன்ற இடங்களில், பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த, பெரிய விமானம் அளவிற்கான ட்ரோன்கள் பயன்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் வசிக்கும் நகர்ப்புறங்களிலும் இப்போது பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் கட்டடங்களை தாக்க வேண்டியுள்ளது. இதற்கு தான் ஆப்செட்திட்டம் பயன்படும்.அண்மையில், ஒரு செயற்கையான நகர வீதியை செட் அமைத்து, அங்கு சில டஜன் ட்ரோன்களை ஏவி, ஒரு கட்டடத்தை சுற்றி வளைத்து வேவு பார்க்கும் ஒத்திகையை நடத்தியது, அமெரிக்க ராணுவத்தின், 'தார்பா' அமைப்பு.

இந்த ட்ரோன்கள் தானே இயங்கும் திறன் கொண்டவை. ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டு தகவல் பறிமாறவும், தரையில் இருக்கும் ராணுவ அதிகாரிக்கு தகவல் தரவும் இவற்றால் முடியும்.இப்படி பல ட்ரோன்கள் ஒருங்கிணைந்து செயல்படும்போது, பயங்கர வாதிகள் பதுங்கியிருக்கும் கட்டடத்தை சுற்றி வளைத்து முற்றுகையிட முடிவதோடு, அடுத்த நடவடிக்கை பற்றி துல்லியமாக ராணுவத்தினர் திட்டமிட்டு நிறைவேற்றவும் முடியும். அடுத்து வரும் சில மாதங்களில், மேலும் ஆறு ஆப்செட் ஒத்திகைகளை அமெரிக்க ராணுவம் மேற் கொள்ள விருக்கிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement