Advertisement

கை அசைவில் இயங்கும், 'பிக்செல் - 4'

கூகுளின் 'பிக்செல்' மொபைல்கள் ஐபோனுக்கு போட்டியாகப் பார்க்கப்படுபவை.இதனால் ஐபோன் போலவே பிக்செலின் அடுத்த மாடல் பற்றி இணைய வதந்திகள் பரவுகின்றன.
இந்த முறை பிக்செல் - 4 மாடல் வருவதற்கு சில மாதங்கள் முன்பாகவே, கூகுளே பிக்செல் - 4ன் சில புதிய வசதிகளை காணொலிகளாக அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் ஒன்றுதான் கையசைவு மூலம் இயக்கும் வசதி.ஏற்கனவே, 2015ல், சோளி (Soli) என்ற கையசைப்புத் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாக, கூகுள் அறிவித்திருந்தது.நான்கு ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு, 'கெஸ்ச்சர் கன்ட்ரோல்' தொழில்நுட்பத்தை பிக்செல் -- 4ல் சேர்க்க, கூகுள் முடிவு செய்துஉள்ளதாகத் தெரிகிறது.

சோளி தொழில்நுட்பத்தின் மூலம், தொடு திரையின் தேய்மானம், கை அழுக்கு படிவது போன்றவை குறையும்.விரல்களை குறிப்பிட்ட விதத்தில் அசைத்தால், அதற்கேற்ப மொபைல் இயங்கும். படங்களை பெரிதாக்குவது, காட்சிகளை மாற்றுவது, ஒலி/ஒளியை கூட்டிக் குறைப்பது, 'ஐகான்'களை சைகை மூலம் முடுக்கி செயலிகளை இயக்குவது என்று பலவற்றையும் சோளி கையசைவுத் தொழில்நுட்பம் எளிதாக்கும்.பிக்செல் -4 ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் கட்டமைக்கப்பட்டது. எனவே, எல்லா ஆண்ட்ராய்டு போன்களிலும் கையசைத்து இயக்கும் வசதி அடுத்த சில மாதங்களில் எதிர்பார்க்கலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement