Advertisement

'தோல்வியை சமாளிக்கிறாரு அமைச்சர்!'

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலில், 108 லிட்டர் பால் அபிஷேகம், 108 தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திருத்தணி எம்.எல்.ஏ., - நரசிம்மன் உட்பட, ஆளும் கட்சி பிரமுகர்கள் பங்கேற்று, நேர்த்தி கடனை செலுத்தினர்.


பின், நிருபர்களிடம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 'வேலுார் லோக்சபா தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். முஸ்லிம்கள் ஓட்டுகளை திருடி, தி.மு.க., வெற்றி பெற்றது. அ.தி.மு.க., வேட்பாளர் தோல்வி அடையவில்லை. லோக்சபா தேர்தலில், லட்சக்கணக்கில் ஓட்டு வித்தியாசம் என்றால் தான் வெற்றி' என்றார்.


மூத்த நிருபர் ஒருவர், 'ஏ.சி.சண்முகம் நுாறு ஓட்டுல தோல்வி அடைந்தாலும், தோல்வி தான்... ஆனா, அமைச்சர் அதை ஏத்துக்காம பேசி, நல்ல சமாளிக்கிறாரு' என, 'கமென்ட்' அடிக்க, அ.தி.மு.க., பிரமுகர்கள் நெளிந்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இன்னும் எத்தனை காலம், எத்தனை பேர் இந்த வேலூர் தோல்வியை வைத்து 'சமாளிப்பு வசனம்' பேசப்போகிறீர்கள்? அடுத்தது உள்ளாட்சித் தோல்விக்குக் கொஞ்சம் மீதி வைத்துக்கொள்ளுங்கள் அய்யாமாரே

  • s.rajagopalan - chennai ,இந்தியா

    "அண்ணே .நான் ஆறாம் க்ளாஸ் பாஸ் ...நீங்கள் எட்டாம் க்ளாஸ் பெயில்-......செந்தில் டயலாக்தான் நினைவுக்கு வருகிறது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement