Load Image
Advertisement

காணக்கிடைக்காத கானக வாழ்க்கை படங்கள்.

கோவை லக்ஷ்மி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட் சார்பில் எட்டாவது முறையாக டிஜே நினைவு புகைப்பட போட்டிகள் நடத்தப்பட்டது.இந்த ஆண்டு போட்டிக்கான தலைப்பாக வனவிலங்கு மற்றும் இயற்கை சார்ந்த புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டது.
வனவிலங்கு பிரிவில் தாமஸ் ராஜன் முதல் பரிசினையும்,நயன் இரண்டாவது பரிசையும் மற்றும் பத்து பேர் சர்ட்டிபிகேட் ஆப் மெரிட் என்ற பாராட்டினையும் பெற்றனர்.

போட்டியில் 6530 புகைப்படங்கள் 1402 போட்டியாளர்களின் மூலம் பதிவு செய்யப்பட்டது இதில் சிறந்த இரண்டு புகைப்படங்களுக்கு முதல் பரிசு மற்றும் இரண்டாம் பரிசு மேலும் அடுத்த சிறந்த 10 புகைப்படங்களில் போட்டியாளர்களுக்கு அவர்களை அங்கீகரிக்க தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Border Collie
Border Collie
Border Collie
Border Collie
Border Collie
Border Collie
Border Collie
Border Collie
Border Collie
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை லக்ஷ்மி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு வழங்கினார் பின்னர் இப்போட்டியின் முக்கிய நிகழ்வாக புகைப்பட கண்காட்சியை ராஜியலட்சுமி ஜெயவர்த்தனவேலு துவக்கி வைத்தார்.
வெற்றி பெற்ற புகைப்படங்களின் கண்காட்சி வரும் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 4 வரை கோவை அவினாசி சாலையில் உள்ள கஸ்தூரி ஸ்ரீனிவாசன் ஆர்ட் கேலரியில் நடைபெறும்,அனுமதி இலவசம்.
எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement