Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'எல்லாரும் அதிர்ச்சியில் உறைவது போன்ற சம்பவம் நடக்கும்போது, உங்களின் இந்தப் பேச்செல்லாம், 'பம்மாத்து' என்பது புரிந்து போகும்... எனவே, இப்படிப் பேசுவதை விட, பேசாமல் இருப்பதே சாலச் சிறந்தது...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., செம்மலை பேட்டி: ஒற்றை மாட்டு வண்டி பயணம் தான், சிறப்பாக அமையும் என்பது தவறு. இரட்டை மாட்டு வண்டியிலும், பயணம் சிறப்பாகவே இருக்கிறது. ஒருங்கிணைப்பாளர், ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர், இ.பி.எஸ்., தலைமையில், அ.தி.மு.க., கட்சியும், ஆட்சியும், சிறப்பாகவே செல்கிறது. இருபெரும் தலைவர்களும், ஒற்றுமையோடு வழி நடத்துகின்றனர். இருவருமே எந்த முரண்பாடுகளும் இன்றி, ஒற்றுமையாகச் செயல்படுகின்றனர். எனவே, ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை.

அ.ம.மு.க., பொதுச்செயலர், தினகரன் பேட்டி: அ.ம.மு.க., வில் இருந்து, யாரோ ஒரு சிலர், சுய காரணங்களுக்காக வேறு கட்சிக்கு செல்வதால், கட்சியின் ஸ்திரத்தன்மையோ, வளர்ச்சியோ, எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.இதை, வருங்காலத்தில் அறியலாம். கட்சியை பதிவு செய்யும் வேலையில் உள்ளதால், வேலுாரில் போட்டியிடவில்லை. பதிவு செய்து முடிந்தவுடன், தேர்தலில் நிற்போம்.


'உங்களுக்கு வேண்டப்பட்டவரின் கிடங்கிலிருந்து, கோடி கோடியா பணம் கண்டெடுக்கப்பட்டது, துரோகமா...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., பொருளாளர்,துரைமுருகன் பேச்சு: வேலுார் லோக்சபா தொகுதி தேர்தல், துரோகத்தால் நிறுத்தப்பட்டது. தேர்தல் நிறுத்தப்பட்ட அறிவிப்பு வந்தபோது, நான் துடித்துவிட்டேன்.அப்போது, ஸ்டாலின் தான் எனக்கு, ஆறுதல் சொன்னார்; நம்பிக்கை கொடுத்தார். வேலுார் தொகுதியில், துரைமுருகன் மகன் நிற்கிறான் என்று பார்க்காதீர்கள்; ஒரு, தி.மு.க.,காரன் நிற்கிறான்; ஊழியன் நிற்கிறான் என்று பாருங்கள். அப்படிப் பார்த்து, வெற்றி பெற வையுங்கள்.


பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி: தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் நடத்தும் பள்ளிகளில், ஹிந்தி கற்றுத் தரப்படுகிறது. ஆனால் அவர்கள், ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்துகின்றனர்.ஹிந்தி எதிர்ப்பில், தி.மு.க.,வினர் இரட்டை வேடம் போட வேண்டாம். எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் குழந்தைகள் மட்டும், ஹிந்தி மற்றும் இதர மொழிகளைக் கற்க வேண்டும்; ஏழை மாணவர்கள்,எதையும் கற்கக் கூடாது என்பது சரிதானா?


மார்க்.கம்யூ., தமிழக மாநில செயலர், பாலகிருஷ்ணன் பேட்டி: தமிழகத்தில், மக்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்னைகள் குறித்துபோராட்டம் நடத்த,எதிர்ப்புகளை தெரிவிக்க, விமர்சனங்களை முன்வைப்பதற்கான உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement