Advertisement

உதயநிதியால் நேரு ஆதரவாளர்கள் கலக்கம்!

உதயநிதியால் நேரு ஆதரவாளர்கள் கலக்கம்!

''பதவி உயர்வு கொடுத்ததால, தமிழக தலைவர்கள், கலக்கத்துல இருக்கா ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.''எந்தக் கட்சி விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''தமிழக, பா.ஜ., மேலிட பொறுப்பாளர்கள்ல ஒருத்தரா இருந்தவர், கர்நாடகாவைச் சேர்ந்த, பா.ஜ., மூத்த தலைவர், பி.எல்.சந்தோஷ்... இவரை, அந்தக் கட்சியின் தேசிய பொதுச் செயலரா, சமீபத்துல நியமிச்சிருக்காளோல்லியோ...''கட்சிக் கட்டுப்பாடு, கொள்கை, கோட்பாடுகள்ல, சந்தோஷ் ரொம்பவே, 'ஸ்ட்ரிக்ட்'டா இருப்பார் ஓய்... இதனாலயே, இவருக்கும், தமிழக, பா.ஜ., தலைவர்கள் சிலருக்கும், லவலேசமும் ஆகாது... இப்ப, அகில இந்திய அளவுல, கட்சியின் அதிகாரம் மிக்க பதவிக்கு, சந்தோஷ் வந்துட்டதால, இங்க இருக்கறவா, கலக்கத்துல இருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.''நானும், பா.ஜ., தலைவர் ஒருத்தரை பத்தி தகவல் வச்சிருக்கேன்...'' என, முன்னுரை தந்த அந்தோணிசாமியே தொடர்ந்தார்...''பா.ஜ., மூத்த தலைவரான சுப்ரமணிய சாமி, ராஜ்யசபாவுல, மத்திய அரசின் நியமன, எம்.பி.,யா இருக்காருங்க... இவரது சொந்த ஊர், மதுரை மாவட்டம், சோழவந்தான்... நேரம் கிடைக்கிறப்ப, சொந்த ஊருக்கு வந்து, குலதெய்வ கோவில்ல சுவாமி கும்பிட்டுட்டு போவாருங்க...''வர்ற, செப்., 15ம் தேதி, சாமிக்கு, 80வது பிறந்த நாள் வருது... இதை, மதுரை அல்லது சென்னையில பிரமாண்டமா கொண்டாட, அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டிருக்காங்க... இதுல, பா.ஜ.,வின் தேசிய தலைவர்கள் பலரையும் கலந்துக்க வைக்கவும் திட்டம் போட்டிருக்காங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.''இனி, நம்மால தலையெடுக்க முடியாதோன்னு கவலைப்படுதாவ வே...'' என, கடைசி விஷயத்தை பேச ஆரம்பித்தார், பெரியசாமி அண்ணாச்சி.''கவலைப்படுறது யாருங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''தி.மு.க.,வுல, ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு, இளைஞர் அணிச் செயலர் பதவி குடுத்திருக்காங்கல்லா... இவரும், திருச்சி, திருவெறும்பூர், எம்.எல்.ஏ., மகேஷ் பொய்யாமொழியும், பள்ளி காலத்துல இருந்தே சேக்காளிங்க...''திருச்சி மாவட்ட இளைஞர் அணியில, பெரும்பாலும், நேருவின் ஆதரவாளர்கள் தான் இருக்காவ... இது, மகேஷ் கண்ணை உறுத்திட்டே இருக்கு வே... இப்ப, உதயநிதியே பதவிக்கு வந்துட்டதால, இனி, மகேஷின் ஆதரவாளர்களுக்கு தான், திருச்சி இளைஞர் அணியில பதவி கிடைக்கும்னு சொல்லுதாவ... இது, நேரு தரப்புக்கு அதிர்ச்சியை குடுத்திருக்கு வே...'' என்றார் அண்ணாச்சி.''போற போக்கை பார்த்தா, உதயநிதி சொல்றவாளுக்கு தான், தேர்தல்ல சீட்டே தருவா போலிருக்கே ஓய்...'' என்றபடியே, குப்பண்ணா கிளம்ப, மற்றவர்களும் நடையை கட்டினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அப்பா மாதிரி ஆற அமர நாற்பதாண்டு காலமெல்லாம் புதல்வர் காத்திருக்க மாட்டார், அவரின் தாயாரும் காக்க வைக்க மாட்டார் ஆச்சு என்று அப்பாவுக்கு கட்டாய ஒய்வு அறிவித்துவிட்டு ,தொண்டர்களின் அன்புத்தொல்லைக் கிணங்க' அரியணை ஏறிவிடுவார்

  • A R J U N - PHOENIX ....ARIZONA..,யூ.எஸ்.ஏ

    ....மூத்த தலைவர், பி.எல்.சந்தோஷ்..அப்படி யாரும் கறார் பேர்வழிகளில்லை. எல்லோரும் சமாளிப்பு கேசுங்கோ...பாத்தாலே தெரியலே..நீட் தேர்வுக்கு சமாளிச்சாங்க பாருங்கோ... நம்ம பொம்பளெ பெரிய ஆபீசர் பாராட்டணும்.. அமுக்கிட்டாங்கோ.."அப்படி" ஒரு FILE லே இல்லேன்னுடாங்கோ..

  • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

    சீட் வேண்டுமென்றால் நேரு தனியாக ஒரு கம்பெனி ஆரம்பிக்க வேண்டியதுதான்.. அவுங்க குடும்ப கம்பெனியின் சட்ட விதிகள் அப்படிதான் பதிவு செய்யப்பட்டுள்ளது.. 1956 கம்பெனிகள் பதிவு சட்டத்தை யார் மாற்ற முடியும்.....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement