Advertisement

'நெருப்பா கொதிக்கிறாரே பொன்.ராதா!'

மதுரை நகரில், பா.ஜ., சார்பில், தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடக்கிறது. அதில் பங்கேற்ற, முன்னாள் மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன், நிருபர்களை சந்தித்தார். அவரிடம், 'தபால் துறை தேர்வுகளில் தமிழ் புறக்கணிக்கப்படுவதாக, தி.மு.க., குற்றம் சாடுகிறதே...' என, நிருபர்கள் கேள்வி எழுப்ப, கடுப்பான பொன். ராதாகிருஷ்ணன், 'தி.மு.க.,விற்கு எந்த மொழி கொள்கையும் கிடையாது. அவர்களது ஒரே கொள்கை உள் பாக்கெட், வெளிபாக்கெட் நிரப்புவது மட்டும் தான். 'தமிழக மக்களை ஏமாற்றும் நிலை மாற வேண்டும். 'எங்கள் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி நடத்தக் கூடாது' என, தி.மு.க., தலைவர்கள் தடுப்பரா? மொழி பிரச்னையில், தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'தி.மு.க.,வை பற்றி, கேள்வி எழுப்பினாலே, நெருப்பா கொதிக்கிறாரு... ஆனா, தமிழில் தேர்வு நடத்த மாட்டோம்ன்னு, தபால் துறை சொல்றது, தப்புன்னு ஒத்துக்க மாட்டேங்கிறாரே... இது தப்பில்லையா...' எனக் கேட்க, மற்ற நிருபர்கள் ஆமோதித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    எது எப்படியோ, யார் கட்டிக்கொண்ட புண்ணியமோ, தமிழில் தபால் துறைத் தேர்வுக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement