Advertisement

'இன்னும் கொஞ்சம் பேர் இருக்காங்க'

அ.ம.மு.க., பொதுச் செயலர், தினகரன், சமீபத்தில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடிக்கு வந்தார். அப்போது பேட்டியளித்த அவர், 'தற்போது, கட்சியை பதிவு செய்யும் முயற்சியில் இருப்பதால், வேலுார் லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை. அங்கீகாரம் பெற்ற, கட்சி சின்னம் கிடைத்த பின் தான், தேர்தலில் போட்டியிடுவோம். எம்.எல்.ஏ., பதவி கிடைக்கும் என நினைத்து, வந்தவர்கள் தான், எங்களிடம் இருந்து பிரிந்து சென்றுள்ளனர்' என்றார்.


பேட்டி முடிந்ததும், நிருபர் ஒருவர், 'கட்சிக்கு சின்னம் கிடைச்சா மட்டும் போதுமா... தேர்தலில் போட்டியிட ஆட்கள் வேண்டாமா?' என்றார். அருகிலிருந்தவர், 'இன்னும் கொஞ்சம் பேர் இருக்காங்க... அவங்க கதையையும் சீக்கிரம் முடிச்சிடுவாரு' என்றதும், அருகிலிருந்தோர் சிரித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    எங்கே தேர்தலில் நிற்கச்சொல்லிடுவாரோ என்று பயந்தவர்கள் 'அப்பாடா தப்பித்தோம் ' என்று பெருமூச்சு விடுவார்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement