Advertisement

'டவுட்' தனபாலு

தி.மு.க., பொருளாளர், துரைமுருகன்: போக்குவரத்து கழகம், எந்த ஜென்மத்திலும், லாபத்தில் இயங்க முடியாது. அது, சேவை நிறுவனமாக செயல்படும். பள்ளி மாணவர்களுக்கு, மினி பஸ்கள் உதவியாக இருந்தன. எனவே, மீண்டும் மினி பஸ்களை இயக்க வேண்டும்.

டவுட் தனபாலு: உங்களுக்கு வேணும்னா, 'நஷ்டம், கடன் கணக்கைப் பார்க்காதீங்க'ன்னு, வேண்டுகோள் வைப்பீங்க... இல்லாட்டி, 'போக்குவரத்துத் துறை, கஷ்டத்தில் இருக்கிறது; நஷ்டத்தில் மிதக்கிறது... முறையற்ற நிர்வாகமே இதற்கு காரணம்'னு, அரசின் மீது குற்றம் சாட்டுவீங்க... இப்படி மாற்றி மாற்றிப் பேசினால், அரசு என்ன தான் செய்யும்கற, 'டவுட்' வரலையா...!

***

இ.பி.எஸ்., முதல்வர்: தமிழகத்தில், 'நீட்' தேர்வு வருவதற்கு, தி.மு.க., - காங்., ஆட்சி இருந்தபோது தான், அறிவிப்பாணை வந்தது. இதற்கு காரணம், அவர்கள் தான்.

டவுட் தனபாலு: முடிந்து போன விஷயத்தை, இன்னும் எத்தனை காலத்துக்குப் பேசுவீங்க... நீட் தேர்வை முறியடிக்க, எங்களால் முடியாதுன்னு சொல்லிடுங்க... நாளைக்கு, நீட் தேர்வால், தமிழக மாணவர்கள் அதிகளவு பயன் பெற்றால், 'எல்லாம், தி.மு.க., - காங்., போட்ட விதை'ன்னு, பெருந்தன்மையாகப் பேசுவீங்களா... இல்லை, அதில் மட்டும், நீங்க பெருமை தேடுவீங்களா என்பது தான், என்னோட, 'டவுட்!'

***

ம.தி.மு.க., பொதுச் செயலர், வைகோ: ராஜ்யசபா தேர்தலுக்கு, என் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ற செய்தியால், மகிழ்ச்சி என்றாலும் கூட, இதுவே வேறு விதமாக வந்திருந்தால், அதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை, 55 ஆண்டு கால பொது வாழ்க்கையில் பெற்று இருக்கிறேன்.

டவுட் தனபாலு: 'உங்க கட்சிக்கு கிடையாது; உங்களுக்கு வேண்டுமானால், ராஜ்யசபா சீட் தருகிறோம்'னு, தி.மு.க., தாராளம் காட்டியது... அதே, தி.மு.க., ஆட்சியில் உங்க மீது போடப்பட்ட தேசத்துரோக வழக்கால், அந்தப் பரிசுக்கும் சிக்கல் வந்தது... நல்லவேளையாக, ஓராண்டு தண்டனை என்பதால், எம்.பி., பதவியை ஏற்க, தடையில்லாமல் போய்விட்டது... எம்.பி., சீட்டைப் பற்றிப் பேசும் நீங்க, இந்த வழக்கு குறித்து ஏன் வாய் திறக்க மாட்டேங்குறீங்க... பேசியது தவறுன்னு ஒப்புக்கொள்றீங்களா என்பது தான், மக்களின், 'டவுட்!'

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

    "inconsistency, thy name is Vaiko" அப்படின்னு ஷேக்ஸ்பியர் அந்த காலத்திலேயே எழுதிட்டார் ...............

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement