Advertisement

எல்லா கட்சிகளும் கம்பெனிகளே!

Share

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், பால்வளத் துறை அமைச்சர், ராஜேந்திர பாலாஜி, சமீபத்தில் நிருபர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், 'தி.மு.க., முன்னாள் தலைவர், கருணாநிதியுடன் அரசியல் செய்து, படிப்படியாக வந்ததால், அவர் மகன், ஸ்டாலினுக்கு பதவி கொடுத்ததை ஏற்றுக் கொள்ளலாம். கடந்த தேர்தலில், 10 நாட்கள் மட்டுமே, பிரசாரம் செய்த உதயநிதிக்கு, உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க., குடும்ப நலனில் மட்டுமே அக்கறை செலுத்தி, அரசியல் செய்து வருகிறது' என்றார்.

இளம் நிருபர் ஒருவர், 'தி.மு.க.,வை குடும்பக் கட்சி என, விமர்சிக்கிற தகுதி, இன்றைக்கு, அ.தி.மு.க.,வுக்கு இருக்கான்னு, துணை முதல்வர் தான் சொல்லணும்' என்றார். அருகிலிருந்த நபர், 'எல்லா கட்சியும் கம்பெனியாகி, பல ஆண்டுகளாச்சு...' என, 'கமென்ட்' அடிக்கவும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement