Advertisement

மறுசுழற்சி பிளாஸ்டிக்கால் ஆன வீடு!

ஒரு கட்டுமான நிறுவனத்திற்கு, இந்த சிந்தனை உதித்தது தான் ஆச்சரியம். வீசி எறியப்பட்ட, 'பெட்' பாட்டில்களை உருக்கி, குளிகைகளாக்கி, அவற்றை அழுத்தத்திற்கு உட்படுத்தி, பிளாஸ்டிக் சுவர்களாக ஆக்க முடியும் என, கனடாவை சேர்ந்த, ஜே.டி.கம்போசைட்ஸ் என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

அண்மையில் கனடாவிலுள்ள நோவாஸ் காட்டியாவில், 6.12 லட்சம் பிளாஸ்டிக் பாட்டில்களை உருக்கி ஒரு முழுமையான வீட்டை கட்டியுள்ளது, ஜே.டி.கம்போசைட்ஸ்.இந்த வீட்டை கட்ட, 100 சதவீதம் மறுசுழற்சி செய்த, 184 பிளாஸ்டிக் பலகைகள் சுவர்களாக, கூரைகளாக பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதன் சுவர்கள் மணிக்கு, 251 கி.மீ., வேகத்தில் வீசும் சூறாவளிக் காற்றையும் தாங்கி நிற்கும் வலுவைக் கொண்டவை என, சோதனைகளில் தெரிய வந்துள்ளது.ஒரு மாடியுள்ள இந்த வீட்டிற்குள், சத்தமும், வெப்பமும், குளிரும், மழையும் நுழையாது.

இந்த மாதிரி வீட்டை, அடுத்து வரும் ஆண்டுகளில் வண்ணப் பூச்சு, வேதி வினை போன்ற பல சோதனைகளுக்கு உட்படுத்தி, வெற்றிகண்டால், இது போன்ற வீடுகளை நிறைய கட்டுவது பற்றி முடிவெடுக்கப்போவதாக, இதன் கண்டுபிடிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement