Advertisement

இவங்க எப்போ அடிச்சிக்கிட போறாங்களோ?

முன்னாள் அமைச்சர், இசக்கி சுப்பையா தலைமையில் பலர், அ.ம.மு.க.,வில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் இணையும் விழா, திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில் சமீபத்தில் நடந்தது.

இதில், முதல்வர், இ.பி.எஸ்., பேசுகையில், 'அண்ணன், தம்பிக்குள் பிரிவு வந்தது; இப்போது சேர்ந்திருக்கிறோம். திருநெல்வேலி மாவட்டத்தில், அ.ம.மு.க. கூடாரம் ஒட்டு மொத்தமாக காலி ஆகியிருக்கிறது' என்றார்.

அ.தி.மு.க., தொண்டர் ஒருவர், 'அ.ம.மு.க., கூடாரம் காலியாவது, நல்லது தான்... ஆனால், எங்களுக்கு தான், இ.பி.எஸ்.,சும், ஓ.பி.எஸ்.,சும் எப்போது வேண்டுமானாலும் அடிச்சிக்கிடுவாங்களேன்னு, பயமா இருக்கு' என்றார். அருகிலிருந்தவர், 'சொத்து ஒண்ணா இருக்கிற வரை, அண்ணன், தம்பிக்குள்ள பிரச்னை வராது பா...' என, 'கமென்ட்' அடிக்கவும், சுற்றியிருந்தோர் கமுக்கமாக சிரித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement